Try GOLD - Free
'இன்செல்' மனிதர்கள் ஜாக்கிரதை!
Dinamani Tiruppur
|July 25, 2025
'இன்செல்' கலாசாரம் எனப்படும் பெண்கள் மீதான வெறுப்புணர்வு கடந்த பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் செழித்தோங்கி வந்துள்ளது. மற்ற வன்முறைகளைப் போல அல்லாமல், இந்த பெண் வெறுப்பு வன்முறைக் கலாசாரத்தை உலகம் தாமதமாக இப்போதுதான் உணர்ந்துள்ளது.
அறிவும், ஆற்றலும், திறமையும் அனைவருக்கும் சமம். எந்த நாடு பெண்மையைப் போற்றுகிறதோ, அதுவே அந்த நாடு முன்னேறுவதற்கான முதல்படி. சமூகம் என்பது பெண்களையும் உள்ளடக்கியதே. அவர்கள்தான், இந்த சமூகத்தையும், உயரிய பண்பாட்டையும், நெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பேணிக் காப்பவர்கள்.
உலகின் இரு கண்களாக ஆண், பெண் உள்ளனர். உள்ளூர் தொடங்கி, உலகம் வரைக்கும், அறிவியல் தொடங்கி, அரசியல் வரைக்கும், மண் முதல் விண் வரை அனைத்துத் துறைகளிலும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை படைத்து, அப்பழுக்கற்ற திறமைகளுக்கு சொந்தக்காரர்களாக இந்தக் கால பெண்கள் விளங்குகிறார்கள்.
நிலம், ஆறு, மொழி முதலியவற்றை தாயாகச் சிறப்பித்துக் கூறுவது நம் நாட்டின் பண்பாகும். 'தாயாகித் தந்தையு மாய்த் தாங்குகின்ற தெய்வம்' என்று பெண்களைப் போற்றுகிறார் வள்ளலார். பெண்களைப் பேணிக் காக்காத இல்லம், இறைவன் இல்லா ஆலயம்' என்றனர் நம் முன்னோர்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர், நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்றார் மகாகவி பாரதியார். அதாவது, பெண்களுக்கு அறிவும், ஞானமும் பிறப்பிலேயே உள்ளது. பெண்களின் அறிவுக்குப் பிறப்போக்குக் கட்டுப்பாடுகளால் தடை போட்டு, அவர்கள் கல்வி பெறக் கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; சுதந்திரமாக இருக்கக் கூடாது என பெண் முன்னேற்றத்துக்கு எதிராக சொல்லி வைத்தவர்களை மூடர்கள் எனச் சாடுகிறார் மகாகவி பாரதியார்.
ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், அந்தக் குடும்பத்திற்கே கல்வி அளித்தது போலாகும். எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், வன்ம எண்ணங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தன்னை விரும்பமறுக்கும் பெண்ணைத் தாக்குவது, கத்தியால் கீறுவது, குத்திக்கொல்வது, அமிலத்தை வீசி முகத்தைச் சிதைப்பது, ரயில், வாகனங்களில் பயணிகும் போது கீழே தள்ளுவது, வரதட்சணை காரணமாகத் தற்கொலை செய்யத் தூண்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொது வாழ்வில் பங்கேற்பு எனப் பெண்களின் வளர்ச்சி பெருமையுடன் அடையாளப்படுத்தப்பட்டாலும், இன்னமும் அவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
This story is from the July 25, 2025 edition of Dinamani Tiruppur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruppur
Dinamani Tiruppur
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tiruppur
கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
June 16, 2026
Dinamani Tiruppur
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Dinamani Tiruppur
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tiruppur
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Tiruppur
உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை
அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
1 min
June 16, 2026
Dinamani Tiruppur
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Tiruppur
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 15, 2026
Dinamani Tiruppur
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Tiruppur
நியூஸிலாந்து தோல்வி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.
1 min
June 15, 2026
Translate
Change font size

