Facebook Pixel நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம் | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்

Dinamani Tiruppur

|

May 29, 2025

கன்னடம் குறித்து சர்ச்சை பேச்சு

பெங்களூரு, மே 28: கன்னடம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் கமல்ஹாசன் பேசியதை கண்டித்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நாசர், நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்த 'தக் லைஃப்' என்ற திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் மே 24 ஆம் தேதி நடந்த படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பாராட்டும் வகையில் பேசிய கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்று கூறியிருந்தார். இது, கர்நாடகத்தில் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் கருத்தை கண்டித்து பெங்களூரு, ஹாசன், மைசூரு, பெலகாவி, ஹுப்பள்ளி உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கர்நாடக ரக்ஷணவேதிகே (பிரவீண் ஷெட்டி பிரிவு) அமைப்பினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தகசபையிடம் அவர்கள் மனு அளித்தனர்.

அதேபோல நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தனது பேச்சுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tiruppur

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruppur

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size