Try GOLD - Free
சங்கப் புலவரின் சான்றாண்மை
Dinamani Tiruchy
|July 20, 2025
பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.
அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப' (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும்.
புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.
அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வு கொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.
சோழன் நலங்கிள்ளி ஆவூர் தனக்குரிய தாதலால் நெடுங்கிள்ளியிடமிருந்த ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். நலங்கிள்ளிக்கு அஞ்சிய நெடுங்கிள்ளி, போரிடாது கோட்டைக் கதவை அடைத்தான். நாட்கள் பலவாகியும் முற்றுகை நிற்கவில்லை.
This story is from the July 20, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Tiruchy
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Translate
Change font size
