Facebook Pixel ஒரு நிலையற்ற அமைதி! | Dinamani Tiruchy - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஒரு நிலையற்ற அமைதி!

Dinamani Tiruchy

|

May 24, 2025

பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்க, சர்வதேச நிதியுதவியைப் பயன்படுத்த பாகிஸ்தான் காட்டும் முனைப்பை உலக சமுதாயம் அலட்சியப்படுத்த முடியாது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை உலக சமுதாயம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், எந்தவொரு நிதியும் பயங்கரவாத செயலுக்காக திருப்பி விடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ரே நேரத்தில் சண்டை நிறுத்த அறிவிப்பும் நமது ஆயுதப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையும் தொடருவது அவசியமாகிறது, ஏனெனில் பொய்த்துப் போன உத்தரவாதங்களை அள்ளிவீசும் வரலாற்றுபூர்வ பின்னணியைக் கொண்ட நாடு பாகிஸ்தான். உள்நாட்டிலேயே பயங்கரவாதத்தை அந்நாடு வளர்த்தெடுப்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரங்களுக்கு என்றும் பஞ்சமில்லை.

பாகிஸ்தானே ஐசி-814 விமான கடத்தலை ஏற்பாடு செய்தது, மும்பை 26/11 தாக்குதல்களுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது, உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனுக்கு அதன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து குறைவான தொலைவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியது, டேனியல் பேர்ல் என்ற வெளிநாட்டு செய்தியாளரைக் கொன்ற கொலையாளிகளைப் பராமரித்தது என இந்தப் பட்டியல் முடிவின்றி நீள்கிறது.

தமது நாடு பயங்கரவாத தளங்களை இயக்குவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் ஒப்புக்கொண்டார். அந்த நாட்டின் விமானப்படை துணைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் '2019' புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். அதை பாகிஸ்தானின் தந்திரோபாய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என அவர் கூறினார்.

நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', பாகிஸ்தானின் பயங்கரவாத வரலாறுக்கும் பஹல் காம் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது நடந்த கொடூரப் படுகொலைகளுக்கும் ஒரு துல்லியமான, பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஈடுகொடுக்கப்பட்ட பதிலடியாக இருந்தது. இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாதத் தளங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தின் சட்ட விரோத வன்முறை செயல்பாடுகளுக்குப் பிறகு, அதன் ராணுவ இலக்குகளைத் தாக்கியதுடன் அந்நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் நிலையங்களை வெற்றிகரமாக அழித்தன.

இரு தரப்பு சண்டை நிறுத்த முடிவு மிகவும் வியப்பான முறையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் அவரது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளரால் அதேபோன்ற அறிவிப்பு வெளியானது. இருவரும் காஷ்மீர் குறித்த தேவையற்ற மேற்கோள்களைக் குறிப்பிட்டு, நடுநிலை தளத்தில் மத்தியஸ்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதில் முக்கியமாக, அரசு ஆதரவு பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக குறிப்பிடுவதை அவர்கள் தவிர்த்தனர்.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு

நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Tiruchy

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

மேற்கு வங்கம்: 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Tiruchy

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size