Try GOLD - Free
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
Dinamani Tiruchy
|May 15, 2025
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
-
புது தில்லி, மே 14:
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த விளக்கமுமின்றி ராணுவ நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்று பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அரசியலாக்குவதாக பாஜகவை சாடியது.
அதேநேரம், ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது; பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் என்ற வார்த்தையை மத்திய அரசு எங்கும் பயன்படுத்தவில்லை என்று பாஜக பதிலடி கொடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்க, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணை கள் மற்றும் ட்ரோன்களை வீசி, இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி அதி துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் அனைத்தையும் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர் நடவடிக்கையின்கீழ் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் மத்தியஸ்தமே சண்டை நிறுத்தத்துக்கு காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தை கருவியாகப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தினேன் என்ற அவரது கருத்துகள், இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
This story is from the May 15, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Tiruchy
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Tiruchy
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Tiruchy
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
