Try GOLD - Free
உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு
Dinamani Tiruchy
|March 05, 2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
-
நியூயார்க், மார்ச் 4: உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் சிலவற்றை நீக்குவது குறித்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைம்மாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்தார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரை ஸெலென்ஸ்கி சந்தித்தார். அந்தச் சந்திப்பு காரசாரமான விவாதமாக மாறியது. ஸெலென்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை எனவும், மூன்றாம் உலகப் போரை உருவாக்க முயற்சிப்பதாகவும் டிரம்ப் நேரடியாகக் கண்டித்தார். இதையடுத்து, அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் ஸெலென்ஸ்கி நாடு திரும்பினார்.
This story is from the March 05, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Tiruchy
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Tiruchy
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Tiruchy
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
