Facebook Pixel நன்றி சொல்வோம்... | Dinamani Thanjavur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நன்றி சொல்வோம்...

Dinamani Thanjavur

|

November 16, 2025

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமைகளில் நன்றி செலுத்தும் நாள் (தேங்க்ஸ் கிவிங் டே) அமெரிக்கா, செயின்ட் லூசியா, லைபீரியா, பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியாவின் நோர்போக் தீவிலும் தேசிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

- -ஆர். வேல்முருகன், கே. நடராஜன், ஆரணி பி. ஜெயச்சந்திரன்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்திய மாநகரங்களில் உள்ள அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களும் இந்த நாளில் விடுமுறையை அளித்து, தங்களது நிறுவன ஊழியர்களைக் கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்கின்றன. உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி விருந்துகளை உண்டு, மகிழ்வார்கள். அலுவலகங்களிலும்கூட இந்த விழாவையொட்டி, பணியாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக் கொண்டு நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில், இந்த நாளில் மாணவ, மாணவியர் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட தின்பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர்.

இது வெறும் உணவு விழா அல்ல; அது நன்றியுணர்வையும், ஒற்றுமையையும், மனித அன்பையும் கொண்டாடும் நாளாகும்.

அமெரிக்காவில் 1621ஆம் ஆண்டின் அந்த சிறிய விருந்திலிருந்து தொடங்கி, இன்று உலகமெங்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தினமாக வளர்ந்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் குறித்து, கத்தாரில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான பத்மபிரியா கார்த்திக்கிடம் கேட்டபோது:

"உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கவாழ் மக்களால் உற்சாகமாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நன்றி என்று சொல்பவரின் மனதில் ஆனந்தத்தையும், கேட்பவரின் மனதில் புன்னகையையும் பெருகச் செய்யும் மந்திர வார்த்தையே அது.

'திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்' என்ற திருக்குறளின்படி, 'ஒருவர் செய்த உதவி திணையளவாயினும் அதனால் பயன்பெறுபவரின் நன்றியுள்ளம் பல்வேறு வகையில் பயன்படக் கூடிய அளவாகக் கருத வேண்டும்' என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பெண் காவலர் புகார்: காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் ஆப்-இல் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, காவல் ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thanjavur

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Thanjavur

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thanjavur

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thanjavur

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thanjavur

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

திருச்செந்தூர் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியீடு

வைகாசி விசாகத் திருநாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.

time to read

1 min

May 31, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Listen

Translate

Share

-
+

Change font size