Try GOLD - Free
கவலை தரும் கல்வியின் தரம்
Dinamani Thanjavur
|August 07, 2025
கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.
அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால் களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர்.
இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.
மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.
பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.
இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.
This story is from the August 07, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Thanjavur
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Thanjavur
கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
June 16, 2026
Dinamani Thanjavur
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Thanjavur
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Dinamani Thanjavur
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Thanjavur
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.
1 min
June 14, 2026
Dinamani Thanjavur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Thanjavur
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Thanjavur
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

