Try GOLD - Free
சமூக நீதியும் சம நீதியும்
Dinamani Tenkasi
|July 18, 2025
இன்றைய அடிப்படையான பிரச்னை ஒரு சமூகத்துக்கு இரண்டு சான்றிதழ் ஏன் என்பதுதான்?. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் சீர்மரபு இனம் (டிஎன்சி) என்ற வகைப்பாடு இல்லை; இங்கு மட்டும் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
இந்திய சமூகம் ஐரோப்பிய நாடுகளைப் போன்றதல்ல. இது முற்றும் முழு வதுமாக சமூகம் சார்ந்தது. இதன் சமூ கக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. இதை அறிந்துதான் அரச மைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத் கர், இந்திய சமூகத்தின் இயங்கியல் மையப் புள்ளி சமூக நீதி என்றார்.
ஆனால், இதை நிறைவேற்றுவதில் தான் பிரச்னைகள் வந்து விடுகின்றன. அரசமைப்புச் சட்டம் தந்த உறுதி மொழிகளால், அதை நிறைவேற்றித் தர முடியவில்லை. ஒவ்வொன்றும் ஆயிர மாயிரம் சட்ட பிரச்னைகளையும், சமூக மோதல்களையும் சந்திக்கும் அபாயத்தை தந்து விடுகிறது. சமூக நீதியை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் அடிப்படை யான சிக்கல் இருக்கிறது.
முதலில் சமூக நீதியை சலுகை என்ப தாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உரிமை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகம் தந்த கொடுமையை அதே சமூகத்துக்கு சரி செய்து கொடுக்கும் உயர் கடமையாகக் கருத வேண்டும். இந்த சமூக நீதியில் மற்றும் ஒரு சமூக நீதி வேண் டும் என்ற குரல் எழுந்துவிடக் கூடாது.
பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் சமூக நீதியைத்தான், சம நீதி என்கிறோம். இன்றைய சமூக நீதியில் சம நீதி இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது என்பதை வெளிப்படை யாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
எந்த தேசத்தின் வளர்ச்சியையும், மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடி யும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூக நீதியாக மட்டுமே இருக்க முடியும். நீதியற்ற சமூகத் தில் எவ்வாறு மனபூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள். மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்திய மில்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.
This story is from the July 18, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
எல்பிஜி டேங்கர் லாரிகள் காலையில் வேலைநிறுத்தம்; மாலையில் வாபஸ்
இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.
1 min
April 28, 2026
Dinamani Tenkasi
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Dinamani Tenkasi
தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு
கடும் வெயில் எதிரொலி
1 min
April 28, 2026
Dinamani Tenkasi
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Tenkasi
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
1 min
April 28, 2026
Dinamani Tenkasi
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
April 27, 2026
Dinamani Tenkasi
பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்
இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
April 27, 2026
Dinamani Tenkasi
கௌஃப், பிளிஸ்கோவா, லெஹகா, முஸெத்தி முன்னேற்றம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு மகளிர் பிரிவில் கோகோ கௌஃப், கரோலினா பிளிஸ்கோவா, ஆடவர் பிரிவில் ஜிரி லெஹகா, லாரென்ஸோ முஸெத்தி முன்னேறினர்.
1 min
April 27, 2026
Dinamani Tenkasi
சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.
1 min
April 27, 2026
Translate
Change font size

