Try GOLD - Free
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
Dinamani Salem
|October 01, 2025
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
மகாத்மா காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அதுமுதல் ஓய்வில்லாத தேச ஒற்றுமைப் பணி- தொடர் போராட்டங்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1915-1919) அவரது உடல் மெலிந்தது; நலிந்தது. அப்போது, அவர் வசித்த இடம் சபர்மதி ஆசிரமம்; 1919, அக்டோபர் 2-ஆம் தேதி அவரது 50-ஆவது பிறந்த நாள் வந்தது.
அன்று அவரது உடல் நிலை சரியில்லை. மோசமடைந்து வருகிறார்; தொடர்ந்து இருமுகிறார். உடனே வருமாறு அவரது மகன்களுக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. மகன் தேவதாஸ் வந்து தந்தையை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை. ஆசிரமவாசிகளிடம் ஏன் இவ்வளவு பேர் இங்கே வந்தீர்கள்? அவரவர் பணியைச் செய்ய வேண்டாமா? என்றார். எந்நிலையிலும் தன் நலம் கருதாமல், பிறர் துயர் துடைப்பதே இறைப் பணி! இதுதான் அண்ணல் நமக்கு விட்டுச் சென்ற 50-ஆவது பிறந்த நாள் செய்தி!
1931 அக்டோபர் 2-ஆம் நாள். அது மகாத்மா காந்தியின் 62-ஆவது பிறந்த நாள். அப்போது, இரண்டாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மகாத்மா பிரிட்டன் சென்றிருந்தார். அங்குள்ள காந்திய அன்பர்கள், அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பினர். லண்டன் லைசெஸ்டர் சதுக்கத்தில் உள்ள விக்டரி ஹாலில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியர்களும் ஐரோப்பியர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
பிறந்த நாள் என்பதற்காக மகாத்மா காந்தி ஓய்வு எடுக்கவில்லை; வழக்கமான பணிகளை மேற்கொண்டார். எப்போதும்போல் வட்ட மேசை மாநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அங்கோ விவாதங்கள் நீடித்தன. மாநாட்டுப் பணிகள் அவரை மிகவும் களைப்பாக்கியிருந்தன. விழா அரங்குக்கு காந்தி வருவதற்கு, காலதாமதம் ஆகிவிட்டது. அது மகாத்மா காந்திக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
விழா அரங்கில் அவர் அதிகம் பேசவில்லை. பேச்சைத் தொடங்கி அவர் சொன்ன முதல் வாசகம்,
'தவிர்க்க இயலாத காரணத்தால், நான் இங்கே வருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்துக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்பதாகும். வந்திருந்த விருந்தினர்கள் அதைக்கேட்டு கண்கலங்கி நின்றனர்!
காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தி கற்பித்த, கடைப்பிடித்த நெறிமுறைகளில் ஒன்றாகும்.
This story is from the October 01, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
மருத்துவப் பல்கலை.: பொறுப்பு துணைவேந்தர் புஷ்கலா
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யின் துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமியின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, மருத்துவப் பேராசிரியர் டாக்டர் புஷ்கலா அந்தப் பொறுப்பை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
June 02, 2026
Dinamani Salem
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓர் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தேர்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Salem
17 லட்சம் டன் யூரியா இறக்குமதி: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2- ஆவது சர்வதேச ஒப்பந்த தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Salem
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.35,000 கோடி ஒதுக்கீடு
மேற்காசிய பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிர்கொள்ள அவசரகால கடன் உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் (இசிஎல்ஜிஎஸ்) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடனாக ரூ.35,000 கோடியை வங்கிகள் ஒதுக்கீடு செய்துள்ளன.
1 min
June 02, 2026
Dinamani Salem
உதிரிபாக விநியோக நிறுவனத்தில் தீ ஹூண்டாய் கார் உற்பத்தி பாதிப்பு
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாக விநியோக நிறுவனமான 'மோபிஸ் இந்தியா' ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹூண்டாய் கார் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Salem
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்
பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்
1 min
June 02, 2026
Dinamani Salem
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Dinamani Salem
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Salem
ஆவினுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை
அமைச்சர் சி.விஜயலட்சுமி வழங்கினார்
1 min
June 02, 2026
Dinamani Salem
ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4.9%
புதிய அடிப்படை ஆண்டுடன் தரவுகள் வெளியீடு
1 min
June 02, 2026
Translate
Change font size
