Try GOLD - Free
உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!
Dinamani Salem
|September 12, 2025
நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றினார். அவர் சர்வ சமயப் பேரவையில் பேசிய முதல் வாக்கியத்திற்கு அரங்கில் இருந்த 4000 பேர் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். இது ஓர் அரிய வரலாற்று உண்மை. முன் பின் தெரியாத ஒருவருக்கு அதுவும் அப்போது அடிமை நாடாக இருந்த இந்தியாவிலிருந்து சென்ற ஒருவருக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தது இந்தியர்களாகிய நமக்குப் பெருமை.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை என்பது உலக தரத்தில் வழங்கப்பட்ட சிறிய, சிறந்த சொற்பொழிவு ஆகும். அந்த உரையில் சுவாமிஜி 3.5 நிமிஷங்கள் மட்டுமே பேசினார். பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளது போல், சிகாகோ உரையில் 18 வாக்கியங்கள் உள்ளன. அந்த உரை 472 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.
சுவாமிஜி உரையாற்ற 5 அல்லது 6 நிமிஷங்களே வழங்கப்பட்டிருந்தன. 'சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' ஆஃப் அமெரிக்கா என்ற அவரது முதல் வாக்கியத்திற்குப் பார்வையாளர்கள் வழங்கிய கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
அந்த உரையின் இன்னொரு சிறப்பம்சம்; சர்வ சமயப் பேரவையில் சமயத் தலைவர்கள் பலரும் தங்கள் மதத்துப் பெருமையை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தரோ, எல்லா மதங்களின் சாரமாக உள்ள மனிதநேயத்தையும் இறையருளில் அனைவரும் வாழ்வது எவ்வாறு என்பது பற்றியும் உரையாற்றினார்.
அந்த மாநாட்டில் பேசிய பலரும் எங்கள் மதத்தை விட்டால் மக்களுக்கு வேறு கதி இல்லை என்ற வகையில் பேசினார்கள். விவேகானந்தரோ, அனைவரையும் அரவணைக்கும்படி உலக மக்கள் எவ்வாறு இருக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.
This story is from the September 12, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து
12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
1 min
June 23, 2026
Dinamani Salem
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Salem
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Salem
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Salem
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
June 23, 2026
Dinamani Salem
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Salem
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Salem
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Salem
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.
1 mins
June 23, 2026
Translate
Change font size
