Facebook Pixel ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி! | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!

Dinamani Salem

|

May 19, 2025

2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.

- வானதி சீனிவாசன்

நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்மீக பலம் உள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவார்கள் என பிரிட்டன் காலனிய அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, 'முஸ்லிம் லீக்'கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனர். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.

இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், ஆனந்தக் கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆயுதமேந்திய கும்பலை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில் அன்று முதல் இன்று வரையில் பயங்கரவாத செயல்களை அங்கே பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

'இந்தியாவுடன் நேரடியாக மோதி, ஒரு நாளும் வெல்ல முடியாது' என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், இந்திய அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடம், பாகிஸ்தானின் பயங்கரவாதப் பின்னணியை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும். உலகின் பல முக்கிய நாடுகளிடமும், பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் துணை நின்றதற்கான ஆதாரங்களை வழங்கும்.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை

ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் சர்ச்சை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அடையாள அட்டையில் ஜாதி விவரங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Salem

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Salem

Dinamani Salem

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Salem

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size