Try GOLD - Free
இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்
Dinamani Ramanathapuram & Sivagangai
|April 19, 2026
குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கைப் பயணம்
இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதிலும், குடியரசு துணைத் தலைவரான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதாலும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்தப் பயணம் இரு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு, 2000-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் (கிருஷண் காந்த்) இலங்கை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் இறுதிச் சடங்குக்காக இலங்கைக்குச் சென்றார்.
இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைப் பயணம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டுமன்றி இந்தியாவிலும் இலங்கையிலும் அரசியல் சூழல்கள் மாறிவரும் காலகட்டத்தில், மிகச் சிறந்த ராஜீய ரீதியிலான ஒருங்கிணைப்பாகவும் கருதப்படுகிறது.
இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு நாள்களிலும், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் நாள் அலுவலிலேயே (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் குடியரசு துணைத் தலைவர் சந்திக்கவுள்ளார். இத்தகைய உயர்நிலை சந்திப்புகள் நீங்கலாக, தனது பயணத்தின்போது 'தமிழன்' பத்திரிகை ஆசிரியர் சிவராஜ், அகில இலங்கை கம்பன் கழக நிறுவனர் இலங்கை ஜெயராஜ் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களையும் குடியரசு துணைத் தலைவர் சந்திக்க உள்ளார்.
This story is from the April 19, 2026 edition of Dinamani Ramanathapuram & Sivagangai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 mins
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 4-இல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
April 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.
1 min
April 29, 2026
Listen
Translate
Change font size

