Try GOLD - Free
உரிமைப் போரில் பௌத்த நாடுகள்!
Dinamani Pudukkottai
|August 13, 2025
சர்வதேச நீதிமன்றம் 1962-இல் ‘ப்ரே விஹார்’ கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன.
லகின் கண்கள் அனைத்தும் காஸா மீது படிந்திருக்க, நூற்றாண்டு கடந்த கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பிரச்னை திடீரென ராணுவ மோதலாக அண்மையில் வெடித்தது. பொருளாதார விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஆசியான் அமைப்பை இந்த மோதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு பௌத்த நாடுகள் எல்லையில் மாறிமாறி குண்டு மழை பொழிந்ததற்கு, ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்ரே விஹார்’ என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னம் அந்தஸ்து பெற்ற ஹிந்து கோயிலின் உரிமைப் பிரச்னைதான் முக்கியக் காரணம் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் செய்தி.
மலேசிய பிரதமரின் தலையீட்டில், தாய்லாந்து-கம்போடிய பிரதமர்களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையால் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. முன்னதாக, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தாய்லாந்து மறுத்திருந்தது. மலேசியாவின் சண்டை நிறுத்தத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தாய்லாந்து, பின்னர் தங்கள் ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே அதிலிருந்து பின்வாங்கியதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் கம்போடியா உண்மையாக ஆர்வம் காட்டினால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாயின.
இந்த மோதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைக் கூட்டியது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளும் மத்தியஸ்தம் செய்ய முன் வந்தன. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கு உடன்படவில்லையெனில் வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என இரு நாடுகளுக்கும் தன் பாணியில் மிரட்டல் விடுத்தார்.
மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் நான் ஆற்றிய பங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டு, தமது சமாதானத் தூதர் பாத்திரத்தை நிலைநாட்ட முயன்றார். எனினும், உக்ரைன் மற்றும் காஸா விவகாரங்களில் டிரம்ப் விடுத்த கெடுபிடிகள் தோல்வியைச் சந்தித்த நிலையில், அந்தப் பின்னடைவுகளை ஈடுசெய்யும் நோக்கில் அவர் எடுத்த முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
This story is from the August 13, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Pudukkottai
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Pudukkottai
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Pudukkottai
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Pudukkottai
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Pudukkottai
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Pudukkottai
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Pudukkottai
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Pudukkottai
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Pudukkottai
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Translate
Change font size

