Try GOLD - Free
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
Dinamani Pudukkottai
|April 22, 2025
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
-
யாருடைய ஆட்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து கடும் விவாதம் நடைபெற்றது.
அதன் விவரம்: கோவிந்தசாமி (அதிமுக): திமுக ஆட்சியில் நம்மைக் காக்கும் 48 திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 57 ஆயிரம் பேர் பயன் பெற்றதாகவும், அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பலன் கிடைத்ததாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கி வரும் போது, எதற்காக ஏன் நம்மைக் காக்கும் 48 திட்டம்?
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அதிக விபத்துகள் நிகழும் 500 இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 723 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தால் உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 843. இதற்காக ரூ.318.31 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் வருவாய், மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காகவே செலவு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தால் அரசு மருத்துவமனைகளும் பயன்பெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் இதேபோன்று தான் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள்.
கோவிந்தசாமி: எங்களுடைய ஆட்சிக் காலத்தில் சிகிச்சை முதலில் கொடுக்கப்பட்டது. காப்பீடு பின்னர் கோரப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எந்த மருத்துவமனையில் அவ்வாறு கேட்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி: எங்களுடைய உறுப்பினர் ஆதாரத்துடன் பேசுகிறார். பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே கருத்துகளைத் தெரிவிக்கிறார்.
This story is from the April 22, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Pudukkottai
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Pudukkottai
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Pudukkottai
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Pudukkottai
டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு
'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
June 27, 2026
Dinamani Pudukkottai
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Pudukkottai
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
1 min
June 27, 2026
Dinamani Pudukkottai
பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்
அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை
1 mins
June 26, 2026
Translate
Change font size
