Facebook Pixel இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா! | Dinamani Puducherry - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!

Dinamani Puducherry

|

July 06, 2025

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

- முனைவர் ம.பெ.சீனிவாசன்

முனைவர் ம.பெ.சீனிவாசன்

இந்த வகையில் பாரியின் மறைவுக்காக கபிலரும், பாரி மகளிரும், அதியமானஞ்சிக்காக ஒளவையும் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் புகழ்மிக்கவை; இன்றும் நம் கண்களில் நீர் சுரக்க வைப்பவை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையு முடையேம்; எம் குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (112)

பாரி மகளிர் தந்தையையும் தமக்குரிய மலையையும் இழந்து செயலற்று ஏங்கிப் பாடுதலின் இது கையறு நிலையாயிற்று. இந்த அவலத்துக்கு இடையிலும் வஞ்சனையால் வென்ற மூவேந்தரை, 'வென்று எறி முரசின் வேந்தர்' என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

ஏனையோர்க்கெல்லாம், 'இனியன்' ஆகிய பாரி மூவேந்தர்க்கு மட்டும் 'இன்னான்' (வேண்டாதவன்) ஆனது எப்படியோ? என்னும் கபிலரின் கூற்றிலும் இவ்வெள்ளல் குறிப்பே எதிரொலிக்கின்றது.

அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே (115:5-6) என்பன அவரின் பாடலடிகள்.

இவ்வாறே அதியமானஞ்சியின் மறைவுச் செய்தி கேட்டதும், இல்லாகியரோ காலை மாலை! அல்லாகியர் யான் வாழும் நாளே! (232) என்னும் ஒளவையின் பாடலில் ஒலிக்கும் அவலத்தையும் அளவிட்டுச் சொல்லவியலாது.

மேலும், 'சிறியகட்பெரினே' (233) எனத் தொடங்கும் பாடலில், இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி முடிப்பது அதியமான் நெடுமான் அஞ்சியின் வள்ளன்மை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளது.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

'இண்டி' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் ஏற்கப்படும்

ராகுல் காந்தி

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Puducherry

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Puducherry

சில்லறை பணவீக்கம் 3.93%

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size