Facebook Pixel முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு

Dinamani Perambalur & Ariyalur

|

May 17, 2025

கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.

இஸ்தான்புல், மே 16:

இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டாலும், இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இந்தப் பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய பேச்சுவார்த்தைக் குழு தலைவர் விளாதிமீர் மெதின்ஸ்கி கூறியதாவது: தற்போது நடந்து முடிந்துள்ள இந்தப் பேச்சுவார்த்தை, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதி. உக்ரைனால்தான் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ரஷியாவும் உக்ரைனும் தலா 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டன.

போர் தொடங்கியதற்குப் பிறகு இவ்வளவு பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

இந்தப் போருக்கு நிரந்தர முடிவு காண்பதும், அதற்கு ஏதுவாக அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுமே தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இந்தப் பேச்சுவார்த்தையை ரஷியா ஆக்கபூர்வமாக அணுகுகிறது. தேவைப்பட்டால் சில விவகாரங்களில் சமரசம் செய்துகொள்ளவும் ரஷியா தயாராக இருக்கிறது.

உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போர் நிறுத்தம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

முன்னதாக, ரஷியாவுடனான போரை 30 நாள்களுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் நிறுத்தி வைப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடந்த வாரம் அறிவித்தன.

இது தொடர்பாக மேற்கொண்டு விவாதிப்பதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இஸ்தான்புல் நகரில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு

நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

மேற்கு வங்கம்: 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Perambalur & Ariyalur

மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size