Try GOLD - Free
செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
Dinamani Perambalur & Ariyalur
|March 11, 2025
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதனைக் கொண்டு திறமையானவர்கள் இயந்திரத்தனமான வேலைச் சுமையை சர்வ சாதாரணமாகச் செய்து முடிக்கிறார்கள். ஆண்டுக் கணக்கில் நடந்த வேலைகள் எல்லாம் நிமிஷக் கணக்கில் முடிகின்றன.
மிக அதிக அளவிலான தகவல் தொகுப்புகளை அவற்றைப் பற்றிய துல்லிய விவரங்களைச் சேர்த்து கணினியில் ஒரே திரையில் செயற்கை நுண்ணறிவு தருகிறது. இதுபோன்று பல பிரம்மாண்டமான செயல்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களைப் பல வகையில் ஏமாற்றுவதற்கும் பயன்படுகிறது. நிதியமைச்சர் பேசாததை அவரே பேசுவது போல் மிகத் தெளிவாக செயற்கை நுண்ணறிவு மூலம் காட்ட முடிகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பது அலாவுதீனின் கையில் உள்ள விளக்கு போல. விளக்கைத் தேய்த்ததும் இட்ட வேலைகளைச் செய்ய பூதம் தோன்றுவதுபோல் செயற்கை நுண்ணறிவு மனிதன் முன்னே வந்து நிற்கிறது. விளக்கைத் தேய்த்துப் பூதத்திடமிருந்து யாருக்கு நன்கு வேலை வாங்கத் தெரியுமோ, அவர்களுக்கு அது வரப்பிரசாதம். பூதத்தைக் கையாளத் தெரியாவிட்டால், அது மனிதனின் கையாலாகாத தனத்தைத் தானே காட்டுகிறது?
செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது என்பதை மாணவர்கள் சிறுவயதிலேயே கற்பது நல்லது. ஆனால் பல மாணவர்கள் சொந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளாமல் செயற்கை அறிவை நம்பி, சுயமான தங்களது திறமைகளை, கற்பனைகளை, சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாத வெற்று மனிதர்களாகப் போய்விடுகிறார்கள். இது கொடுமையானது.
ஒரு கட்டுரை அல்லது கடிதம் அல்லது பவர் பாயிண்ட் பிரசென்டேஷனைத் தானாகச் செய்யாமல் சாட் ஜிபிடி பின்னே ஓடுகிறார்கள். அசல் சிந்தனைகள் இல்லாத வெறும் தகவல் அறிவு கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். விரைவிலேயே அவர்கள் தொழில்நுட்பம் தரும் சொகுசுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அசல் சிந்தனை இருந்தால்தான் மனிதன் சரியான தகுதியிலும் தரத்திலும் வளர்வான்.
This story is from the March 11, 2025 edition of Dinamani Perambalur & Ariyalur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு
'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 26, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்
1 min
June 26, 2026
Dinamani Perambalur & Ariyalur
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Translate
Change font size
