Try GOLD - Free
வண்ண, வண்ண சேலைங்க!
Dinamani Perambalur & Ariyalur
|March 09, 2025
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
-
இந்த ஆண்டு அவர் அணிந்திருந்த பீகாரின் பாரம்பரிய மதுபானி கலையின்படி உருவாக்கப்பட்ட மீன் வடிவங்கள் இடம்பெற்றிருந்த தங்கநிற பார்டர் கொண்ட கிரீம் கலர் கைத்தறிச் சேலையும், சிவப்புநிற ரவிக்கையையும் உருவாக்கி பரிசளித்தவர் பீகாரைச் சேர்ந்த மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 'பத்மஸ்ரீ' விருது பெற்ற துலாரி தேவி.
இந்தச் சேலையின் டிசைனை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா தேவநாதன். தனது 'யூடியூப்' சேனல் மூலமாக அந்தச் சேலையை அறிமுகம் செய்த உடனேயே, அது ஏராளமான பெண்களைக் கவர்ந்துவிட்டது. இணையத்திலும் ஆர்டர்கள் குவிந்துவருகின்றன.
அவரிடம் பேசியபோது:
"நான் பி.இ. கணினி அறிவியல் முடித்துவிட்டு, டி.சி.எஸ் நிறுவனத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது உறவினர்களும், அலுவலக நண்பர்களும் எனக்கு சேலைகள் தேர்வு செய்வதில் நல்ல ரசனையும், திறமையும் இருக்கிறது என்று கூறி, துணிகளை வாங்கப் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார்கள். 'இந்தத் திறமை இருக்கிறதே!
அதைப் பயன்படுத்தி ஒரு வியாபாரம் ஆரம்பித்தால் என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.
மக்கள் தங்களுக்குப் பிடித்த சேலைகளையும், இதர ஆடைகளை வாங்குவதற்கு பல கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய நெரிசலான உலகத்தில் மக்களுக்கு இது சிரமமாக உள்ளது. இதனால் இணைய வணிகமாகவே இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.
இந்த நேரத்தில் கரோனா காலமும் வந்துவிட்டது. மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும், தங்களுக்குத் தேவையான பொருள்களை இணையத்திலேயே வாங்கினர்.
This story is from the March 09, 2025 edition of Dinamani Perambalur & Ariyalur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Translate
Change font size
