Try GOLD - Free
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!
Dinamani New Delhi
|April 04, 2025
லங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு மோடி சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரு தரப்பும் புவிசார் அரசியல், பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் பொருளாதார ரீதியிலான பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன.
வரலாற்றுபூர்வ உறவு: இந்தியாவும் இலங்கையும் நீண்ட பொருளாதார வரலாற்றைக் கொண்டவை. இந்தியாவின் முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) இலங்கையுடன் 1998 இல் கையொப்பமாகி 2000-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
இருப்பினும், வர்த்தக புள்ளிவிவரங்களின்படி 2018-இல் 4.67 பில்லியன் டாலராக இருந்த இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2023 -இல் 3.62 பில்லியன் டாலராக சரிந்தது. இதே காலகட்டத்தில் இலங்கையின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2018 -இல் 1.32 பில்லியன் டாலரிலிருந்து 2023-இல் 991 மில்லியன் டாலராக குறைந்தது.
பயணத்தின் நோக்கம்: இலங்கையில் ஏப். 5-இல் அதிபர் அநுர குமார திசாநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஒப்பந்தங்கள் கையொப்பம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடக்கின்றன. ஏப். 6-இல் அனுராதபுரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித ஸ்ரீ மகா போதியில் வழிபடுகிறார்.
கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, காணொலி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார்.
வடகிழக்கு நகரமான திருகோணமலையில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதனால், இந்த இடத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தை இந்தியா கேந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.
This story is from the April 04, 2025 edition of Dinamani New Delhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani New Delhi
Dinamani New Delhi
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani New Delhi
நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 30, 2026
Dinamani New Delhi
எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 28, 2026
Dinamani New Delhi
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani New Delhi
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani New Delhi
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம்: ரூ.25,530 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
1 min
May 28, 2026
Dinamani New Delhi
எடப்பாடி பழனிசாமி-எஸ்.பி.வேலுமணி சமரசம்
ஒற்றுமையுடன் செயல்பட முடிவு
1 mins
May 28, 2026
Dinamani New Delhi
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani New Delhi
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Dinamani New Delhi
கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடர்பான தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 28, 2026
Translate
Change font size

