Try GOLD - Free
கடன் வலையில் சீக்காவி!
Dinamani Namakkal
|October 07, 2025
க்ரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு உலகெங்கும் மக்களின் பொருளாதார வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களும், தொழில் நிறுவனங்களும் கடன் வாங்காமல் அன்றாடப் பிழைப்பை கடத்த முடிவதில்லை. பெரும்பாலான நிதி நிறுவனங்களும் அதிக கெடுபிடி எதுவுமின்றி அனைவருக்கும் கடனை வாரி வழங்க முன்வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வட்டி அவற்றுக்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தருகின்றன.
சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவில் கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 22% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் கடன் வாங்கிய பெண்களில் வணிக நோக்கங்களுக்கு 3 சதவீதமும், தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றுக்காக 42 சதவீதமும், தங்கத்தை வாங்குவதற்காக 38 சதவீதமும் அடங்குவர். மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் வணிகக் கடன்களுக்காக பல்வேறு வங்கிகளில் திறக்கப்பட்டுள்ள புதிய கணக்குகளின் எண்ணிக்கையும் 4.6 மடங்கு அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, கடன் வாங்கியுள்ள சுமார் 2.7 கோடி பேரில் 60% பேர் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.
பெண்களில் பலர் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமும் பல்வேறு நிதி நிறுவனங்களின் மூலமும் எளிதில் கடனைப் பெறுகின்றனர். இவை பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்களில்தான் கிடைக்கின்றன. போதிய வருமானம் இல்லாத நிலையில் இவற்றைத் திரும்பச் செலுத்துவதில் அவர்களுக்கு சவால்கள் பல தொடர்ந்து இருந்து வருகின்றன. கணவருக்குத் தெரியாமல் தெரிந்தவர்களிடம் அதிக அளவு கடன் வாங்கும் மனைவிகளும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனர். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திரும்பப் பெற இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, அவர்களால் சில சமயங்களில் தர முடிவதில்லை.
This story is from the October 07, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
சிபிஎஸ்இ தேர்வு விவகாரம்: மாணவர்களுடன் உரையாடிய விடியோ வெளியிட்டார் ராகுல்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய பிளஸ் 2 தேர்வில் திரையில் மதிப்பீடு (ஓஎஸ்எம்) செய்யும் முறையில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் உரையாடிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 min
June 01, 2026
Dinamani Namakkal
மூன்றாம் கட்ட எஸ்ஐஆர்: 4 மாநிலங்களில் கணக்கெடுப்பு படிவ நடைமுறை தொடக்கம்
நாட்டில் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் (எஸ்ஐஆர்), ஒடிஸா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் கணக்கிட்டு, பூர்த்தி செய்து பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Namakkal
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வென்றது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 கோல் கணக்கில் தென் கொரிய மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
June 01, 2026
Dinamani Namakkal
பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Namakkal
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
1 mins
June 01, 2026
Dinamani Namakkal
அனைத்துத் துறைகளின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 01, 2026
Dinamani Namakkal
பல்வேறு மாவட்டங்களில் உலகத் தரத்திலான விளையாட்டு மையங்கள் அமைக்க ஆய்வு
கோவை, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உலகத் தரத்திலான விளையாட்டு மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பொதுப் பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
1 min
June 01, 2026
Dinamani Namakkal
'இந்திய நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு'
இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக அந்த நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 01, 2026
Dinamani Namakkal
சோழர் கால செப்பேடுகள் தமிழ் சமூகத்துக்கு பெருமை
புகழ்பெற்ற சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்திடம் இருந்து இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணமாகும்; குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் பெருமிதத்தில் திளைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
June 01, 2026
Dinamani Namakkal
ஆலங்குளம் அருகே அரிவாள் வெட்டு சம்பவம்: இளைஞரை சுட்டு பிடித்த போலீஸார்
ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் திருமண வீட்டில் புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
1 min
June 01, 2026
Translate
Change font size
