Try GOLD - Free
மறுக்கப்படும் உரிமை!
Dinamani Madurai
|October 25, 2025
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
பணியிடங்களில் ஊழியர்களின் மன நலன், உழைப்புச் சமநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முரண்பாடுகளைக் கூர்ந்து ஆராய்வதும், விடுப்பு நடைமுறைகளைச் சீரமைப்பதும் காலத்தின் கட்டாயம்.
பொதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு என விடுப்புகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சட்டப்படி, ஒரு பணியாளர் விடுப்பு எடுக்கும்போது, நிறுவனம் அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, குடும்ப நல அறுவைச் சிகிச்சை விடுப்பு எனப் பல சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு, பெரும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் துறையில் நிலைமை முற்றிலும் மாறுபடுகிறது. சட்டங்கள் வலுவாக இருந்தாலும், தனியார் துறை ஊழியர்கள் முக்கியமான நேரங்களில்கூட விடுப்பு எடுக்கப் போராட வேண்டியுள்ளது. அதற்காக நீண்ட பல விளக்கங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், பல ஊழியர்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர்.
This story is from the October 25, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தார் சி.வி. சண்முகம்
விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவையடுத்து, அதிமுக மாவட்ட அலுவலக சாவியை மாவட்டச் செயலர் இரா. பசுபதி வசம் முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் எம்எல்ஏ சனிக்கிழமை ஒப்படைத்தார்.
1 min
May 31, 2026
Dinamani Madurai
மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
May 31, 2026
Dinamani Madurai
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Madurai
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Madurai
வெளியேறினார் ஜோகோவிச்
சபலென்கா, ஓஸாகா முன்னேற்றம்
1 min
May 31, 2026
Dinamani Madurai
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Madurai
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Madurai
உலக சாம்பியனை வீழ்த்தி சாத்விக்-சிராக் அசத்தல்; இறுதிக்கு தகுதி
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனர் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.
1 min
May 31, 2026
Dinamani Madurai
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Madurai
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Listen
Translate
Change font size

