Facebook Pixel என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்? | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

Dinamani Madurai

|

July 17, 2025

இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவருக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.

- கிருங்கை சேதுபதி

ரவு, பகல் பாராமல், ஏன் இரவு பகல் வேறுபாடுகள்கூடத் தெரியாமல் கைப்பேசிக்குள் கண் புதைத்து வாழ்வோர் பெருகிய காலமாக மாறி வருகிறது. அதிலும், அண்மைக்காலமாக, சிறியோர் முதல் பெரியோர் வரை, 'ரீல்ஸ்' மோகத்திற்கு உள்ளாகி, அடிமையாகி வருகிறார்கள்.

தன்னைத் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டு 'தற்படம்' ஆகிய நிலைப்படத்தை (ஸ்டில்) எடுத்து வெளியிட்ட காலம்போய், தன்னையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, தான் செய்யும் அரிய சாதனையை (?) உலகறியச் செய்யும் தொடர்படமாக, கைப்பேசி வழி எடுத்து, அதன்வழி கிடைக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிடும் படக்காட்சியே 'ரீல்ஸ்'.

அது பரவலாகிப் பலரும் பார்க்கப்படுவதை, 'வைரலாகிறது' என்கிறார்கள். பார்ப்பதும் ரசிப்பதும், மீள் பதிவிடுவதும் ஆகி, 'வைரஸ்' நோய்போல் பரவி வரும் இப் பற்றுநோய், புற்றுநோய்போல் பலரைத் தன்வயப்படுத்தி வருகிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி, எதையும் எப்போதும் பதிவாக்குவதும், உடன் பதிவிடுவதும், அது எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது, விருப்பம் (லைக்ஸ்) தெரிவிக்கப்படுகிறது, என்னென்ன பதிலிகள் (கமென்ட்ஸ்) வருகின்றன என்று பார்ப்பதிலுமே பலரது உயிரினைய பொழுதுகள் விரயமாகின்றன.

அதைவிடவும், 'ரீல்ஸை', படமாக்கிய படியே நேரடியாக (லைவ் ஆக) பதிவிடுகிறவர்கள் சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபட்டு, தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கிறார்கள்; உயிரிழக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் திரைக்காட்சியில் இடம்பெறுவதுபோல் சாகசம் நிகழ்த்தி நேரடிப் படமாக்கி ஒளிபரப்ப விழைவதையும், அவ்வாறு படமாக்கிவரும்போதே விபத்தில் சிக்கி உயிரிழப்பதையும் காண முடிகிறது.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Madurai

சிறப்பு விமானத்தில் மதுரைக்கு வந்த 'நீட்' மறு தேர்வு வினாத்தாள்கள்

தில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த 'நீட்' மறு தேர்வுக்கான வினாத் தாள்கள், பலத்த பாதுகாப்புடன் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

time to read

1 min

June 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Madurai

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு

ஜி7 தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தி யோகா

உலக மக்களை அவர்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Madurai

தேர்தல் தோல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மம்தா மனு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் தோல்வியடைந்ததை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Madurai

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயர்வைச் சந்தித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Madurai

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி

தமிழகத்தின் மொத்த கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாக மாநில அரசின் நிதி மேலாண்மை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

time to read

1 mins

June 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தனியார் பள்ளிகளின் உரிமம், புதுப்பித்தலுக்கு ஜூலை 1 முதல் இணையவழி நடைமுறை

அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size