Try GOLD - Free
சீர்திருத்தத்தை நோக்கி தேர்வு நடைமுறைகள்
Dinamani Madurai
|June 13, 2025
இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்களின் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தினை இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் தொடங்கி வைத்தார். 12 மாநிலங்களின் தேர்வாணையத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அரசுத் துறைப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் செயல்முறைகளில் நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது என அக்கூட்டத்தில் முடிவெடுத்தனர். மேலும், தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தேர்வு தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்றவை பற்றியும் பேசப்பட்டது. மொத்தத்தில் இதை ஓர் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வும், தொலைநோக்குத் திட்டமும், சீர்திருத்தமும் அடங்கிய கூட்டமாக கருத முடியும்.
பெருகிவரும் மக்கள் தொகையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக் கனவை இத்தேர்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏனெனில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுள் வேலைவாய்ப்பற்றவர்கள் 4.9% வீதம் என்று மதிப்பிட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு மற்றும் இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு போன்றவற்றுக்கு தலா 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால், அரசுப் பணிகளின் மீதான நாட்டம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.
This story is from the June 13, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான அனுமதிச் சீட்டை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Madurai
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Madurai
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Madurai
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து
12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
1 min
June 23, 2026
Dinamani Madurai
அமோனியா கசிவு விபத்து: 3 நாளில் முழு விசாரணை அறிக்கை
அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக முழுமையான அறிக்கையை 3 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பேரவையில் தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Madurai
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Madurai
பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.
1 min
June 23, 2026
Dinamani Madurai
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.
1 mins
June 23, 2026
Dinamani Madurai
புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை
பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம்
2 mins
June 23, 2026
Dinamani Madurai
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Translate
Change font size
