Try GOLD - Free
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
Dinamani Madurai
|May 18, 2025
முனைவர் விமலா அண்ணாதுரை
-
சிவபெருமானின் பெருமைகளையும் அவரை வழிபட்டு உய்ந்த சிவனடியார்களின் பெருமைகளையும், அழகாக எடுத்துக் கூறும் புராணம் பெரியபுராணம் ஆகும். சேக்கிழார் சுவாமிகள் 'பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட' பாடிய இப்புராணத்துக்கு சிவபெருமானே, உலகெலாம் என்று அடியெடுத்துக்கொடுத்ததாக இப்புராணத்தின் சிறப்பை ஆன்றோர் போற்றிப் புகழ்கின்றனர்.
சைவத்தின் மேன்மையைப் பாட விருப்பம் கொண்ட சேக்கிழார் பெருமானுக்குத் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் மேன்மையையும் பாட வேண்டுமென்ற விருப்பம் இருந்திருக்கிறது என்பது பெரிய புராணத்தின் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கிறது.
வடநாட்டுக்குச் சென்று கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரிசிப்பது முக்திக்கு வழிவகுக்குமென்ற கொள்கையிலும் சுவாமிகளின் மனம் அதிகம் ஒன்றியதாகத் தெரியவில்லை. அவரது நாட்டுப் பற்று அதற்கு இடங் கொடுக்கவுமில்லை. தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறப்புடையதென்பதே அவரது புராணத்தின் அடிநாதமாக இருக்கிறது.
நமிநந்தி அடிகளின் கனவிலே சிவபெருமான் தோன்றி, 'திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோரும் தேவ கணங்களே' என்று கூறுவது திருவாரூரின் சிறப்பைக் கூறும் ஒன்று.
திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலே, திருநாவுக்கரசர், கயிலைமலை நோக்கிச் செல்லும் காட்சியை மிக அற்புதமாகக் காட்டுகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
முதுமையின் கொடுமையால் நடக்க முடியாமல் தவழ்ந்து செல்கிறார் அப்பர். இரவு பகலாக விடாமுயற்சியுடன் தவழ்ந்து, தவழ்ந்து கயிலைமலை யாத்திரையை மேற்கொள்கிறார் நாவுக் கரசர்.
This story is from the May 18, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 mins
June 29, 2026
Dinamani Madurai
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Madurai
லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
1 min
June 29, 2026
Dinamani Madurai
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Madurai
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Madurai
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Madurai
கண்டதேவியில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
June 29, 2026
Dinamani Madurai
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Madurai
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Madurai
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
1 mins
June 29, 2026
Translate
Change font size
