Try GOLD - Free
மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்
Dinamani Madurai
|March 29, 2025
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
-
பாங்காக், மார்ச் 28:
இதில் கடும் பாதிப்பைச் சந்தித்த மியான்மரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 730 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 90-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக்கொண்டு இந்த இரண்டு நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின் படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் காலை 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடர்ந்து, வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் அவசரநிலையை மியான்மரின் ராணுவ அரசு பிரகடனம் செய்தது.
‘நிலநடுக்கத்தால் மியான்மரின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டலாய் மற்றும் சகாய்ங் மாகாணங்களின் பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்திருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமான தேவைகள் தொடர்பான தகவல்கள் இன்னும் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது’ என்று செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
This story is from the March 29, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 28, 2026
Dinamani Madurai
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Madurai
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
ராமர் கோயில் நன்கொடை விவகாரம்; அறக்கட்டளை பொதுச் செயலர், அறங்காவலர் ராஜினாமா
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாக அந்த அறக்கட்டளை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 28, 2026
Dinamani Madurai
பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு
பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்குவது தொடர் பாக வெளியிடப்பட்ட அரசா ணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக் கில், அரசாணையின் செயலாக்கத் துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
June 28, 2026
Dinamani Madurai
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Madurai
அமெரிக்கா-ஈரான் மீண்டும் மோதல்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தால் பதற்றம்
1 min
June 28, 2026
Dinamani Madurai
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
