Try GOLD - Free
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!
Dinamani Madurai
|March 13, 2025
குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மூன்று முறை 1951, 1961, 1971 ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.
மேற்கூறிய கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகை முறையே அன்றைய காலகட்டத்தில் 36 கோடி, 43.9 கோடி மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 1952-இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிகள் அமைக்கப்பட்டன.
அடுத்து நடந்த கணக்கெடுப்புகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என உயர்ந்தது. அடுத்து நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவமும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆகவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அப்படி எந்தப் பிரச்னையும் எழாது என்று பாஜக சொல்கிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினரும், தமிழக மக்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
தற்போது இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்ற மறுசீரமைப்பின் மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மும்மொழித் திட்டத்தினை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதியைத் தர முடியாது என்று கூறுவது அடக்குமுறை. கூட்டாட்சிக்கு எதிரானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக இயற்றி அதன் மூலம் பெரும் பயனும் அடைந்திருக்கிறது.
This story is from the March 13, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Madurai
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Madurai
பருப்பு வகைகள் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
எல்-நிநோ விளைவு
1 min
June 05, 2026
Dinamani Madurai
தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளருக்கு 4 நாள் போலீஸ் காவல்
தில்லி மால்வியா நகரில் உள்ள ஹோட்டலில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜின் கைது சட்டபூர்வமானது மற்றும் நியாயமானது என்று குறிப்பிட்ட தில்லி நீதிமன்றம், அவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
1 min
June 05, 2026
Dinamani Madurai
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Madurai
பிகார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
பிகார் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 05, 2026
Dinamani Madurai
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை
தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 05, 2026
Dinamani Madurai
மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: கணினிப் பராமரிப்புப் பொறியாளர் கைது
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை சார்ந்த கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் (ஹார்டு டிஸ்குகள்) திருடப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவனத்தின் சார்பில் கணினிப் பராமரிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 05, 2026
Dinamani Madurai
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Madurai
பாஜக பெண் நிர்வாகி மீது அவதூறு: திருச்சி சூர்யா கைது
பாஜக மாநில பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகாரின்பேரில், அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை சென்னை போலீஸார் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
June 05, 2026
Translate
Change font size
