Facebook Pixel ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு

Dinamani Madurai

|

March 02, 2025

ரஷியாவுடனான போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்தன.

நியூயார்க், மார்ச் 1:

டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய ஸெலென்ஸ்கி, அங்கு அவர்களின் காட்டமான விமர்சனத்தை எதிர்கொண்டு பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் ஊடகத்தில் அவர் பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் ஐரோப்பா, பிற பகுதிகளைச் சேர்ந்த கூட்டணி நாடுகளின் தலைவர்கள் ஸெலென்ஸிக்கு ஆதரவும் ஆறுதலும் தரும் வகையில் பதிலளித்தனர்.

இது குறித்து ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லியன் வெளியிட்ட பதிலில், 'உங்கள் தன்மானம் நிறைந்த நிலைப்பாடு உக்ரைன் மக்களின் வீரத்தை கௌரவப்படுத்தும் வகையில் அமைந்தது. இதே போல் பயமற்று இருக்கவும். உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம்' என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வெளியிட்ட பதிவில், 'இந்தப் போரில் ரஷியா ஆக்கிரமிப்பு நாடு; உக்ரைன் பாதிக்கப்பட்ட நாடு. நாம் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பக்கத்தில்தான் நிற்போம்' என்று குறிப்பிட்டார்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

பிரிவுகள் நிரந்தரமல்ல...

கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Madurai

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Madurai

பருப்பு வகைகள் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

எல்-நிநோ விளைவு

time to read

1 min

June 05, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளருக்கு 4 நாள் போலீஸ் காவல்

தில்லி மால்வியா நகரில் உள்ள ஹோட்டலில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜின் கைது சட்டபூர்வமானது மற்றும் நியாயமானது என்று குறிப்பிட்ட தில்லி நீதிமன்றம், அவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பிகார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

பிகார் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Madurai

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: கணினிப் பராமரிப்புப் பொறியாளர் கைது

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை சார்ந்த கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் (ஹார்டு டிஸ்குகள்) திருடப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவனத்தின் சார்பில் கணினிப் பராமரிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Madurai

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Madurai

பாஜக பெண் நிர்வாகி மீது அவதூறு: திருச்சி சூர்யா கைது

பாஜக மாநில பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகாரின்பேரில், அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை சென்னை போலீஸார் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size