Facebook Pixel தொடரும் ஜனநாயகப் பின்னடைவு | Dinamani Karaikal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு

Dinamani Karaikal

|

April 22, 2026

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.

- பெ. கண்ணப்பன்

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு

தேர்தல் நடத்தி, வாக்கெடுப்பின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான ஆட்சியை அமைத்துக் கொள்வது ஜனநாயக ஆட்சி முறையாகும். உலகிலுள்ள 195 நாடுகளில் 70 முதல் 75 நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகவும், உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் தங்களின் நாட்டை ஆட்சி செய்யும் பிரதிநிதிகளைத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் சமீபத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவருகின்றன.

ஜனநாயக ஆட்சிமுறை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட நபரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பல நாடுகளில் வாழ்ந்த சிந்தனையாளர்கள் பலரால் வடிவமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் வேர்கள் மிகவும் தொன்மையானவை.

பண்டைய சமுதாயத்தில் மன்னர்கள் முழு அதிகாரத்துடன் மக்களை ஆட்சி செய்துவந்தனர். இத்தகைய ஆட்சிமுறையானது பொதுமக்கள் மீதான பல்வேறு அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் வழிவகுத்தது. கருத்து, பேச்சு, மதம் போன்றவற்றில் சுதந்திரம் இன்றி, ஆட்சியாளர்களின் கருத்துகளுக்கு பொதுமக்கள் உட்பட்டு செயல்படும் நிலை நிலவி வந்தது. மக்களில் ஒருசாராருக்கு கட்டாய உழைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டது. வரி விதிப்பில் விருப்பு-வெறுப்பும், ஏற்றத்தாழ்வும் நிலவின.

காலப்போக்கில் அறிவியல் மற்றும் பகுத்தறிவு தொடர்பான சிந்தனைகள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்றன. அதைத் தொடர்ந்து, அரசு எடுக்கும் முடிவுகளில் பொதுமக்கள் பங்கு பெற வேண்டும்; மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் ஆட்சி முறை அமைக்கப்பட வேண்டும் போன்ற கருத்துகள் சமுதாயத்தில் வெளிப்படத் தொடங்கின.

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த அமெரிக்கப் புரட்சியின் விளைவாக, நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும்; மக்களின் ஒப்புதலுடன் அரசு இயங்க வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கருத்து உருவானது. 'தேர்தல் ஜனநாயகம்' என்றழைக்கப்படும் புதிய அரசமைப்பின் தொடக்கத்துக்கு அமெரிக்கப் புரட்சி வித்திட்டது.

MORE STORIES FROM Dinamani Karaikal

Dinamani Karaikal

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Karaikal

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karaikal

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size