Try GOLD - Free
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
Dinamani Karaikal
|November 04, 2025
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் மற்றும் அந்த மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) அங்கம் வகிக்கும் அணியான 'மகாகட்பந்தன்' (மாபெரும் கூட்டணி) அதன் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவை அடையாளப்படுத்தியுள்ளது.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை ஆளும் நிதீஷ் குமார் அரசு 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் தீவிர பிற்படுத்தப்பட்டோர் (இபிசி), மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர். பட்டியலினத்தவர் (எஸ்சி) 19.65 சதவீதமும், பழங்குடியினர் (எஸ்டி) 1.68 சதவீதமும் உள்ளனர்.
தரவுகளின்படி, தேஜஸ்வி சார்ந்த யாதவர் சமுதாயம் (ஓபிசி வகுப்பு) 14.27 சதவீதமாக உள்ளது. 1990-களில் மண்டல் ஆணைய பரிந்துரை (அரசுப் பணிகளில் ஓபிசி-களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு) அமல்படுத்தப்படும் வரை பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய உயர் வகுப்பினர், 2023-இல் மாநில அரசால் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் 15.5 சதவீதம் உள்ளதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் யாதவர் சமுதாயத்தின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
This story is from the November 04, 2025 edition of Dinamani Karaikal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karaikal
Dinamani Karaikal
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Karaikal
இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
May 30, 2026
Dinamani Karaikal
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Karaikal
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Karaikal
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Karaikal
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Karaikal
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Dinamani Karaikal
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Karaikal
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Karaikal
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

