Facebook Pixel 100-ஆவது ஆண்டில் ஒரு காந்தியப் போராளி! | Dinamani Karaikal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

100-ஆவது ஆண்டில் ஒரு காந்தியப் போராளி!

Dinamani Karaikal

|

June 16, 2025

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி.

- க.பழனித்துரை

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி. அவர் திங்கள்கிழமை (ஜூன் 16) தன் 100-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்; இந்த வயதிலும் நடந்து வந்து, அகவல்பாடி கூட்டத்தில் நின்று நிதானித்து பேசும் ஆற்றலுடன் இருக்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.

சர்வோதயப் போராளியான கணவர் ஜெகந்நாதன் மறைந்துவிட்டார்; எனினும் இவரிடமிருந்து அவரைப் பிரிக்க முடியாது. இவர்கள் காந்திய களப் பணியில் இருவராகவே அறியப்பட்டவர்கள். 'கீழவெண்மணியில் என்னுடன் (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) பணி செய்தவர்களுடன் அன்று அந்த நாளைக் கழிக்க வேண்டும். என்னை அங்கு கொண்டு விடுங்கள், அதுவே எனது விருப்பம்' என்று அங்கு செல்கிறார். அவர் இருக்கும் இடம் காந்தி கிராம ஊழியரகம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய ஓட்டுக் கட்டடம். காந்தி கிராமத்தில் ஒரு சிறிய ஓடைக்கு அருகில் இருக்கிறது. அந்த சிறிய கட்டடம் தியாக காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று வாழும் காந்தியர்களில் இவர் மூத்த காந்தியப் போராளி. கதர் ஆடை, தற்சார்பு, எளிய வாழ்க்கை, விளிம்பு நிலை மக்களுக்காகவே அர்ப்பணித்து இன்றும் களத்தில் இருக்கும் காந்தியர். புதுமை காந்தியர்களை உருவாக்கி களத்தில் செயல்பட வைத்து, அவர்களின் ஆத்ம பலத்தை கூட்டிக் கொண்டு பணி செய்ய இளைஞர்களுடன் பயணிக்கும் இவரது பண்பு, பாங்கு, பார்வை அனைத்தும் புதுமை.

இவரால் இந்த வயதில் எப்படி இத்தனை இளைஞர்களைக் கவர முடிகிறது என்பதுதான் பலரின் கேள்வி. அகிம்சையில் அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை; காந்தியத்தில் தோய்ந்து வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியின் சக்தியை தன் இடையறாத பாடல்களால் பெற்று வருகின்ற இளைஞர்களுக்கெல்லாம் தன் வாழ்க்கையை முன்னுதாரணமாக ஆக்கி வைத்திருப்பதுதான் இவரின் தனிச் சிறப்பு.

மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து மக்களுடன் போராடி அவற்றைத் தீர்ப்பதில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியின் செயல்பாடுகள் இருந்ததால், ஓடும் நீராகவே வாழ்ந்தது எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி.

MORE STORIES FROM Dinamani Karaikal

Dinamani Karaikal

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size