Try GOLD - Free
பரந்த கடல், விரிந்த கடற்கரை...
Dinamani Karaikal
|June 11, 2025
சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைக்கு 'நீலக்கொடி சான்றிதழ்' பெறுவதற்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகில் நீரின் மிகப் பெரிய இயற்கை மூலமாக கடல் விளங்குகிறது. நீர் சூழ்ந்த இப்பேருலகில் ஆர்த்தெழும் கடலே மாபெரும் பரப்பை (71 சதவீதம்) கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில் தான் (29 சதவீதம்) நிலப்பரப்பு உள்ளது. தொன்மைக்காலந்தொட்டே கப்பல் போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் முதலியன கடல் வழியேதான் மேற்கொள்ளப்பட்டன. கடலைச் சுற்றித் தான் அக்காலத்தில் உலகம் இயங்கி வந்துள்ளது. மனித நாகரிகம் வளர்ச்சி பெறுவதற்கு கடல் கடந்த வணிகம் ஒரு பெரும் காரணியாக இருக்கிறது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
உட்புறம் நெருப்பு குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் புவியின் மேற்பரப்பை குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கிறது. எனவே, அதை 'புவியின் தோல்' என்று அழைக்கின்றனர். கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்துள்ள நிலப் பகுதியாகும். கடற்கரைகள் பொதுவாக மணல் அல்லது பாறைகளால் ஆனவை. கடலையொட்டி அமைந்துள்ள கடற்கரைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் அன்றிலிருந்து இன்றுவரை விளங்கி வருகின்றன; அத்துடன் கடல், வணிகத்தை மேற்கொள்ளவும், கடலோர பகுதிகளை அரிப்பிலிருந்து காக்கவும், துறைமுகங்கள் அமைக்கவும், வணிகங்களை மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
தேசிய நீர்வரைவியல் அமைப்பு (நேஷனல் ஹைட்ரோகிராஃபிக் ஆர்கனைசேஷன்) மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு, இந்தியாவின் கடற்கரை பகுதிகள் கடந்த 53 ஆண்டுகளில் 48 சதவீதம் விரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 1970-இல் இந்திய கடற்கரை பகுதியின் நீளம் 7,516 கி.மீ.-ஆக இருந்தது. தற்போது, இது 2023, 2024-இல் 11,098.81 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 1970-இல் பதிவு செய்யப்பட்டதைவிட நீளம் 3,582.21 கி.மீ. அதிகரித்துள்ளது.
This story is from the June 11, 2025 edition of Dinamani Karaikal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karaikal
Dinamani Karaikal
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Karaikal
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Karaikal
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Karaikal
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
