Facebook Pixel 'இன்செல்' மனிதர்கள் ஜாக்கிரதை! | Dinamani Erode & Ooty - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

'இன்செல்' மனிதர்கள் ஜாக்கிரதை!

Dinamani Erode & Ooty

|

July 25, 2025

'இன்செல்' கலாசாரம் எனப்படும் பெண்கள் மீதான வெறுப்புணர்வு கடந்த பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் செழித்தோங்கி வந்துள்ளது. மற்ற வன்முறைகளைப் போல அல்லாமல், இந்த பெண் வெறுப்பு வன்முறைக் கலாசாரத்தை உலகம் தாமதமாக இப்போதுதான் உணர்ந்துள்ளது.

- கட்டுரையாளர்: எழுத்தாளர்.

அறிவும், ஆற்றலும், திறமையும் அனைவருக்கும் சமம். எந்த நாடு பெண்மையைப் போற்றுகிறதோ, அதுவே அந்த நாடு முன்னேறுவதற்கான முதல்படி. சமூகம் என்பது பெண்களையும் உள்ளடக்கியதே. அவர்கள்தான், இந்த சமூகத்தையும், உயரிய பண்பாட்டையும், நெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பேணிக் காப்பவர்கள்.

உலகின் இரு கண்களாக ஆண், பெண் உள்ளனர். உள்ளூர் தொடங்கி, உலகம் வரைக்கும், அறிவியல் தொடங்கி, அரசியல் வரைக்கும், மண் முதல் விண் வரை அனைத்துத் துறைகளிலும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை படைத்து, அப்பழுக்கற்ற திறமைகளுக்கு சொந்தக்காரர்களாக இந்தக் கால பெண்கள் விளங்குகிறார்கள்.

நிலம், ஆறு, மொழி முதலியவற்றை தாயாகச் சிறப்பித்துக் கூறுவது நம் நாட்டின் பண்பாகும். 'தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்' என்று பெண்களைப் போற்றுகிறார் வள்ளலார். பெண்களைப் பேணிக் காக்காத இல்லம், இறைவன் இல்லா ஆலயம்' என்றனர் நம் முன்னோர்.

'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர், நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்றார் மகாகவி பாரதியார். அதாவது, பெண்களுக்கு அறிவும், ஞானமும் பிறப்பிலேயே உள்ளது. பெண்களின் அறிவுக்குப் பிறப்போக்குக் கட்டுப்பாடுகளால் தடை போட்டு, அவர்கள் கல்வி பெறக் கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; சுதந்திரமாக இருக்கக் கூடாது என பெண் முன்னேற்றத்துக்கு எதிராக சொல்லி வைத்தவர்களை மூடர்கள் எனச் சாடுகிறார் மகாகவி பாரதியார்.

ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், அந்தக் குடும்பத்திற்கே கல்வி அளித்தது போலாகும். எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், வன்ம எண்ணங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தன்னை விரும்ப மறுக்கும் பெண்ணைத் தாக்குவது, கத்தியால் கீறுவது, குத்திக்கொல்வது, அமிலத்தை வீசி முகத்தைச் சிதைப்பது, ரயில், வாகனங்களில் பயணிகும் போது கீழே தள்ளுவது, வரதட்சணை காரணமாகத் தற்கொலை செய்யத் தூண்டுவது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொது வாழ்வில் பங்கேற்பு எனப் பெண்களின் வளர்ச்சி பெருமையுடன் அடையாளப்படுத்தப்பட்டாலும், இன்னமும் அவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

'இண்டி' கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக

'இண்டி' கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Erode & Ooty

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்

ரஷிய அதிபர் புதின்

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size