Try GOLD - Free
அறிவிப்பும் அதிருப்தியும்...
Dinamani Erode & Ooty
|May 02, 2025
மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும், பண்டிகைக்கால முன்பணம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாகவும், பொங்கல் பரிசுத்தொகை ரூ. 500-லிருந்து ரூ. 1,000-ஆகவும், ஓய்வூதியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ. 4,000-லிருந்து ரூ. 6,000-ஆகவும், குழந்தைகளின் உயர் கல்விக்கான முன்பணம் தொழில் படிப்புகளுக்கு ரூ. ஒரு லட்சமாகவும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ. 50,000-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
மேலும், நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண்செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வருகிற செப்டம்பர் 30-க்குள் அளிக்க அறிவுறுத்தப்படும் என்றும், பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது பதவி உயர்வுக்கான தகுதியைப் பாதிக்காத வகையில் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
முதல்வரின் இந்த அறிவிப்புகளில் சிலவற்றை அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக்கிக்கொள்வது தவிர, ஏனைய அறிவிப்புகள் அரசிடமிருந்து கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்துவதாகும் என இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர்.
This story is from the May 02, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
தமிழர் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி
தமிழ் மக்களின் மேன்மைக்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் அறிவித்தார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை
2 mins
June 04, 2026
Dinamani Erode & Ooty
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Dinamani Erode & Ooty
இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை
இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Translate
Change font size
