Try GOLD - Free
இதழியலின் அஞ்சா நெஞ்சர்!
Dinamani Erode & Ooty
|April 18, 2025
ந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.
-
அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், உண்மையை ஒலிக்க யாருக்கும் அஞ்சாத சிலரின் குரல்களை அடக்க முடியாது. அந்த மிடுக்கான மனிதர்களில் முக்கியமானவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமத்தின் நிறுவனர்-தலைவரான ராம்நாத் கோயங்கா.
ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது அனைத்துப் பத்திரிகைகளையும் காலவரையின்றி மூடி சுதந்திரப் போரில் பங்கெடுத்த ராம்நாத் கோயங்கா, அவசரநிலையின்போது அதிகார மையம் கட்டவிழ்த்த சவால்களை மீறி தன்னுடைய பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்தி கருத்துரிமையை நிலைநிறுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலராகத் திகழ்ந்தார்.
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம், தற்போதைய பிகார் மாநிலத்தின் வட பகுதியான தர்பங்காவில் 1904-இல் பிறந்த ராம்நாத் கோயங்கா, வணிகம் செய்வதற்காக சென்னைக்கு வந்தார். ராம்நாத் கோயங்காவுக்கு சென்னை வெறும் வியாபார இடமாக மட்டுமல்லாமல் சமுதாயம், அரசியல் புரிதலுக்கான ஒரு வளமான மேடையாகவும் மாறியது.
நகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் கலந்து பழகி, சமுதாயத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் மக்களின் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.
22 வயது இளைஞராக ராம்நாத் கோயங்காவின் சமுதாயநல ஆவலை உற்றுநோக்கிய சென்னை நிர்வாகம், 1926-இல் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராக அவரை நியமித்தது. அரசின் நியமனப் பதவியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக அதை முழுமையாகப் பயன்படுத்தி, அரசின் தவறுகளையும் குறைகளையும் உரைக்கத் தயங்காத அவரது நேர்மை பலரை வெகுவாகக் கவர்ந்தது.
சுதந்திர வேட்கை வேரூன்றியிருந்த அவர், தேசபற்றுக் கொண்ட பத்திரிகைகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வராஜ்யா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தார். அந்த வகையில்தான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.
This story is from the April 18, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Erode & Ooty
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Erode & Ooty
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Erode & Ooty
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Translate
Change font size
