Try GOLD - Free
கவனம் சிதறக் கூடாது!
Dinamani Erode & Ooty
|March 17, 2025
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
மாணவப்பருவத்தினர் வன்முறையில் நாட்டம் கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, சாதி, சமயங்களின் அடிப்படையில் விருப்பு வெறுப்பைக் காட்டுவது, உள்ளூர் உலக அரசியல் விவகாரங்களில் தேவையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்ப, நெறியற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கான வேட்கையும் வேகமும் மாணவப் பருவத்தில் உருவாவது இயற்கையே. ஆனால், எதிர்கால முன்னேற்றம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே நினைவில் வைத்து நெறியற்ற நடவடிக்கைகளை நாடாமல் இருக்கப் பழக வேண்டும்.
தனியொரு மாணவன் நல்லவனாகவே இருப்பான். ஆனால், பல மாணவர்கள் ஒன்று கூடினால் மோசமானவர்களாக நடந்து கொள்வார்கள் என்று பொருள்படும் ஆங்கிலப் பழமொழியை நிரூபிப்பது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடும் வேளைகளில் எத்தகைய அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்ற தைரியம் அவர்களுக்கு உருவாகிவிடுகின்றது. அதன் வெளிப்பாடாகவே நீண்ட காலமாகத் தொடரும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்குகின்றன.
ஒரே கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது, தாங்கள் பயிலும் கல்லூரி தவிர்த்த இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை வம்புக்கு இழுப்பது, பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டமாக ஏறி ரகளை செய்வது, கல்வீசுவது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுவெளிகளில் திரிவது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவர்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.
This story is from the March 17, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Erode & Ooty
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
