Try GOLD - Free
தாய் - தந்தையைப் போற்றுவோம்!
Dinamani Dindigul & Theni
|June 14, 2025
ஆதிசங்கரர் மாபெரும் துறவி. எதன் மீதும் பற்றுக்கொள்ளாத அவரால் தாய்ப் பாசத்தைத் தள்ளிவிட முடியவில்லை. அன்புத் தாயின் உயிர் துன்ப உலகை விட்டுப் பிரியும் தருணத்தில் அவர் உடன் இருந்தார். உடலுக்குத் தீ மூட்டும் கடமையைச் செய்தார். அப்போது புகழ்பெற்ற மாத்ரு பஞ்சகம் பாடினார்.
சிலப்பதிகாரத்தை 'ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று தொடங்கினார் இளங்கோவடிகளார். அவரைப் பின்பற்றும் முறையில் இன்று அன்னையைப் போற்றுவோம், தந்தையைப் போற்றுவோம்' என்று தமிழர்கள் சொல்லில் நாட்ட வேண்டும், செயலிலும் காட்ட வேண்டும். ஏனெனில், இவர்கள் தான் அடுத்துவரும் இளம் தலைமுறையினரைக் காப்பாற்றுகின்றனர்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தொடர் ஒலி, காற்றுப்போல் எங்கும் பரவியிருந்தது. செந்தமிழ் இலக்கியங்கள் இந்தச் சிறந்த கருத்தை நெஞ்சில் தங்கச் செய்தன. புலவர் உலகநாதன் மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் என்று ஓதினார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒளவையார்.
ஆசாரக்கோவை என்பது சங்கநூல். அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தனக்கு முன் பிறந்தவன் ஆகிய இவர்களைத் தெய்வம் என்று எண்ணி வணங்கு என்று அது மனத்தில் பதிவு செய்தது.
தாயைவிடச் சிறந்த உறவினர் இல்லை என்று விளம்பிநாகனார் அறிவித்தார். அவர் மேலும் ஒரு மேன்மைக் கருத்தை உரைத்தார். எல்லாக் கடவுளையும்விட, தாயே உயர்ந்தவள்; தாயோடு ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய கடவுளே இல்லை என்றார் அந்தப் பல்கலைச் செல்வர்.
ஈன்றாளொடு எண்ணக் கடவுளும் இல் (நான்மணிக்கடிகை - 57) குமர குருபரர் பற்றற்ற நற்றவப் புலவர், தந்தையும் தாயும் இறைவனாவர் என்றார் அவர் (நீதிநெறி விளக்கம் 27) தாயும் நீயே தந்தை நீயே என்றார் சம்பந்தர்; தாயுமாய் எனக்கே என்றார் அப்பர். தந்தை, தாய் ஆகியோரை வழிபட வேண்டும் என்றார் சொல் வல்ல நல்லாதனார் (திரி கடுகம்).
அம்மா மண்ணுள் மறைந்துவிட்டால், பிறகு சுவையான உணவு கிட்டாது என்று நீதிவெண்பா எண்ணச் செய்தது.
கருவை அன்னை பத்து மாதம் சிப்பிக்குள் முத்துப்போல் சுமக்கிறாள். அவள் பிரசவ நேரத்தில் வலி தாங்க முடியாமல் மிகப் பெரும் வேதனை பெறுகிறாள்.
சிலசமயம் மகப்பேறின்போது சில பெண்களின் உயிர்கள் விடை பெற்றுக் கொண்டு சென்றதுண்டு; பெற்ற குழந்தையை, இமை கண்ணைக் காப்பதுபோல் அவள் காப்பாற்றுகிறாள். குழந்தைக்கு நோய் வந்தால் அவள் மருந்து சாப்பிடுகிறாள்.
This story is from the June 14, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Translate
Change font size
