Facebook Pixel பரந்த கடல், விரிந்த கடற்கரை... | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பரந்த கடல், விரிந்த கடற்கரை...

Dinamani Dindigul & Theni

|

June 11, 2025

சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைக்கு 'நீலக்கொடி சான்றிதழ்' பெறுவதற்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

- டாரப்புறத் இராதாகிருஷ்ணன்

உலகில் நீரின் மிகப் பெரிய இயற்கை மூலமாக கடல் விளங்குகிறது. நீர் சூழ்ந்த இப்பேருலகில் ஆர்த்தெழும் கடலே மாபெரும் பரப்பை (71 சதவீதம்) கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில் தான் (29 சதவீதம்) நிலப்பரப்பு உள்ளது.

தொன்மைக்காலந்தொட்டே கப்பல் போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் முதலியன கடல் வழியேதான் மேற்கொள்ளப்பட்டன. கடலைச் சுற்றித் தான் அக்காலத்தில் உலகம் இயங்கி வந்துள்ளது. மனித நாகரிகம் வளர்ச்சி பெறுவதற்கு கடல் கடந்த வணிகம் ஒரு பெரும் காரணியாக இருக்கிறது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

உட்புறம் நெருப்பு குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் புவியின் மேற்பரப்பை குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கிறது. எனவே, அதை 'புவியின் தோல்' என்று அழைக்கின்றனர்.

கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்துள்ள நிலப் பகுதியாகும். கடற்கரைகள் பொதுவாக மணல் அல்லது பாறைகளால் ஆனவை. கடலையொட்டி அமைந்துள்ள கடற்கரைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் அன்றிலிருந்து இன்றுவரை விளங்கி வருகின்றன; அத்துடன் கடல், வணிகத்தை மேற்கொள்ளவும், கடலோர பகுதிகளை அரிப்பிலிருந்து காக்கவும், துறைமுகங்கள் அமைக்கவும், வணிகங்களை மேற்கொள்ளவும் பயன்படுகிறது.

தேசிய நீர்வரைவியல் அமைப்பு (நேஷனல் ஹைட்ரோகிராஃபிக் ஆர்கனைசேஷன்) மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு, இந்தியாவின் கடற்கரை பகுதிகள் கடந்த 53 ஆண்டுகளில் 48 சதவீதம் விரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 1970-இல் இந்திய கடற்கரை பகுதியின் நீளம் 7,516 கி.மீ.-ஆக இருந்தது. தற்போது, இது 2023, 2024-இல் 11,098.81 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 1970-இல் பதிவு செய்யப்பட்டதைவிட நீளம் 3,582.21 கி.மீ. அதிகரித்துள்ளது.

தற்போது, கடற்கரை, கடற்கரை தீவுகள் மற்றும் கழிமுகங்கள் (ஐலெட்ஸ்) பற்றிய துல்லியமான கணக்கெடுப்புகளை மேற்கொண்டதாலும், பழைய கணக்கெடுப்பின்போது, கணக்கிட இயலாத கடற்கரை வளைவுகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத, சீரற்ற நிலை வெளிப்புறங்கள் ஆகியவற்றின் அளவீடுகளை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Dindigul & Theni

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Translate

Share

-
+

Change font size