Facebook Pixel காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ரூட் | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ரூட்

Dinamani Dindigul & Theni

|

March 25, 2025

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள் கிழமை முன்னேறினர்.

மியாமி கார்டன்ஸ், மார்ச் 24:

ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 6-1, 7-6 (7/1) என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் கமிலோ யுகோவை வென்றார். அடுத்த சுற்றில் அவர், இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தியை எதிர்கொள்கிறார். முசெத்தி முந்தைய சுற்றில், 4-6, 6-2, 6-3 என, 18-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமேவை வென்றார்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ரூட் 6-4, 7-6(7/4) என்ற கணக்கில், 30-ஆம் இடத்திலிருந்த சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிளோவை வெளியேற்றினார். ரூட் அடுத்த சுற்றில், ஆர்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதுகிறார்.

டாமி பால், சிட்சிபாஸுக்கு அதிர்ச்சி: போட்டித்தரவரிசையில் 23-ஆம் இடத்திலிருக்கும் செருண்டோலோ முந்தைய சுற்றில், 6-2, 7-6 (7/4) என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தார்.

பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 7-5, 5-7, 7-6 (7/1) என்ற செட்களில் ஸ்பெயினின் ஜேமி முனாரை வீழ்த்தினார். அடுத்து அவர், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார். போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருக்கும் கோர்டா முந்தைய சுற்றில் 7-6 (7/4), 6-3 என்ற கணக்கில், 9-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை சாய்த்தார்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Dindigul & Theni

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Dindigul & Theni

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்

சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Dindigul & Theni

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Dindigul & Theni

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size