Facebook Pixel மகளிரின் போராட்டமும் உரிமைகளும்... | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

Dinamani Dindigul & Theni

|

March 08, 2025

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

உலகம் முழுவதும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தின கொண்டாட்டங்கள் வாழ்த்துகள் அதிகரித்து வருகின்றன.

இந்த தினம் எப்போது தோன்றியது, அதன் பின்னணி என்ன? என்ற வரலாற்றை அனைவரும் அறிந்து கொண்டால்தான் தற்போதைய சூழலில் உழைப்பில் ஈடுபடும் பெண்களின் சூழ்நிலை, பிரச்னைகள் குறித்து புரிந்து கொள்ள முடியும்.

1820-ஆம் ஆண்டு புதிய பிரிட்டனில் முதன்முதலாக தையல் பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு 1844-ஆம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிச உலகக் கூட்டத்தில் ஜவுளி ஆலையில் பணியாற்றும் பெண்களுக்கான போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளிகளின் 10 மணி நேரப் பணி நேரம், தொழிற்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை குறித்து இந்தப் போராட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறைவான கூலி கொடுத்தால் போதும்; அதிக மணி நேரம் வேலை வாங்கலாம் என்பதால் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். குறைவான கூலி; 15 மணி நேரம் வேலை; கடுமையான பணி; கடுமையான அபராதங்கள்; காற்றோட்டம் - வெளிச்சம் இல்லாத பணிச்சூழல்; குழந்தைகளுக்கு அதிகப் பணி நேரம் என்று மோசமான சூழ்நிலை நிலவியது.

இதை எதிர்த்து அவ்வப்போது பெண் தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஜெர்மனிய தொழிற்சங்கத் தலைவரும் சோஷலிச ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவருமான கிளாரா ஜெட்கின் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 1889-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கம்யூனிச உலகக் கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினார்.

அதிகமான பணி நேரம், மிகக் குறைவான கூலி, மிக மோசமான பணியிடம் - குறிப்பாக, பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பு கிடைக்காதது ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார். மேலும், ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் பெண் தொழிலாளர்கள் விடுதலை அடைய முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size