Try GOLD - Free
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!
Dinamani Dharmapuri
|March 16, 2026
சொத்துரிமை, முத்தலாக் ஆகிய இரண்டுமே முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் முக்கியமானவை.
இவற்றில் ஒரே நேரத்தில் மூன்று முறை 'தலாக்' கூறி ஆண்கள் விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் சட்டம் 2019 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்தது. எனவே, முஸ்லிம் தனிநபர் ஷரியத் சட்டத்தில் (1937) பெண்களுக்குப் பாகுபாடு காட்டும் சொத்துரிமை, வாரிசுரிமை பிரிவுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் பௌலொமி பாவினி சுக்லா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, ஆர். மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.'வாரிசுரிமை என்பது சிவில் உரிமை, மதச் சடங்கு இல்லை. எனவே, முஸ்லிம் ஆண்களுக்கு நிகரான சொத்துரிமையை முஸ்லிம் பெண்களுக்கும் வழங்க வேண்டும். ஷாயரா பானு வழக்கில் முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முத்தலாக் போல மதம் சார்ந்த விவகாரமாக இல்லாமல், சொத்துரிமை சிவில் உரிமை என்பதால், நீதிமன்றமே உத்தரவிடலாம்' என்றார் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில் 'தனிநபர் சட்டங்களிலுள்ள பாலின, வாரிசுரிமை, சொத்துரிமை, திருமண வேற்றுமைகளுக்கு 'பொதுச் சிவில் சட்டமே' தீர்வாகும். இதே கருத்தை 1985 ஷா பானு, 1995 சர்ளா முட்கல், 2003-இல் ஜான் வல்லமட்டோம், 2019-இல் ஜோஸ் பாலோ கோடின்ஹோ வழக்குகளில், பொது சிவில் சட்டத்தின் தேவையை வலியுறுத்தி நீதிபதிகள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளனர்' என்றார்.
இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டதால், இங்கு 'பொது உரிமையியல் சட்டம்' அமல்படுத்தப்படவில்லை. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசமைப்புச் சட்டம் 44-ஆவது பிரிவு 'இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்கள் ஒரே சீர்மையிலான பொது சிவில் சட்டத்தைப் பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும்' என்கிறது.
This story is from the March 16, 2026 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க அரசின் ஒத்துழைப்பு அவசியம்
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்
1 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
பயிற்சியாளர் மட்டுமல்ல...
சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார்.
1 mins
April 26, 2026
Dinamani Dharmapuri
ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களைப் பயன்படுத்த புதிய அமைப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை
1 min
April 26, 2026
Dinamani Dharmapuri
உலகை இணைக்கும் நடனம்
பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.
2 mins
April 26, 2026
Dinamani Dharmapuri
சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம்
சிதம்பரம் கோயிலில் ஸ்ரீநடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
April 26, 2026
Dinamani Dharmapuri
11 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், ஈரோடு உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.
1 min
April 26, 2026
Dinamani Dharmapuri
சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூர்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.
1 min
April 26, 2026
Dinamani Dharmapuri
கட்சி மாறிய 7 எம்.பி.க்கள்: தகுதி நீக்கம் கோர ஆம் ஆத்மி முடிவு
ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. க்கள் 7 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அந்த அவையின் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
April 26, 2026
Dinamani Dharmapuri
பெண் கொலை புரிந்த நன்னன்
சங்கப் பனுவல்கள் மிகவும் சிறப்பான படைப்பு மொழியைக் கொண்டு விளங்குகின்றன.
2 mins
April 26, 2026
Dinamani Dharmapuri
தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
2 mins
April 26, 2026
Listen
Translate
Change font size

