Try GOLD - Free
முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!
Dinamani Dharmapuri
|May 27, 2025
போட்டித் தேர்வுகள் என்பது மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல், சில மணிநேர தேர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.
இந்திய அளவில் உயர்நிலைக் கல்வியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கல்வியை முன்னேற்றப் பயன்படும் என்றாலும், மாணவர்களின் நோக்கம் மருத்துவப் படிப்பிலேயே இருக்கிறது.
வெற்றிபெற வேண்டுமென்ற இலக்கு இருக்குமானால் எந்தத் துறையிலும் சிகரத்தைத் தொடமுடியும். ஆனால், மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று எண்ணி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றுதான் கூறவேண்டும். கல்வியாளர்களின் அறிவுரை மாணவர்களிடம் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை.
மருத்துவக் கனவுக்கு ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதற்கு ‘விலக்கு’ அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. என்றாலும், இதுவரை இதற்கு முடிவும், விடிவும் ஏற்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கடந்த மே 4 அன்று நடைபெற்றது. தேர்வு மைய நுழைவாயிலில் காவல் துறையினரும், தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் தீவிர சோதனைகள் நடத்தினர்.
கடந்த ஆண்டு (2024) வினாத்தாள் கசிவு விவகாரம் இன்னும் முடியவில்லை. வழக்குகள் தொடர்கின்றன. முறைகேடுகளும் குறைபாடுகளும் தொடர்கின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட்) முறைகேட்டில் ஈடுபட்டதாக 2024-25 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்துசெய்து ஆணையிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் 26 எம்.பி.பி.எஸ். மாணவர்களை உடனடி இடைநீக்கம் செய்யவும் என்எம்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
This story is from the May 27, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி
அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !
சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
இந்திய ஆடவர் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி
மு.க. ஸ்டாலின்
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
1 mins
June 07, 2026
Dinamani Dharmapuri
வலுவான நிலையில் இந்தியா 368/3
முல்லன்பூர் டெஸ்ட்
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Dharmapuri
ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
1 mins
June 07, 2026
Translate
Change font size
