Try GOLD - Free
‘கிப்லி’... கவனம் தேவை!
Dinamani Dharmapuri
|April 07, 2025
கடவுச்சொற்கள் மற்றும் கடன் அட்டைகளின் எண்களைக்கூட நாம் சீரான இடைவெளியில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நம் முகத்தை மாற்றிக்கொள்ள இயலாதே! ஓபன் ஏஐ மூலம் புகைப்படங்களை உள்ளிடுவதால் நம் முகத்தரவுகள் திருடப்படும் வாய்ப்பு உள்ளது
இரண்டு தினங்களுக்கு முன் என்னுடன் பணியாற்றும் தோழி ஒருவர், அவரின் குடும்ப புகைப்படத்தை சாட் ஜிபிடியில் உள்ளீடு செய்து அதற்கு இணையான ‘கிப்லி’ புகைப்படத்தை வெளியே எடுத்திருந்தார். அதை ஆர்வத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். அந்த ‘கிப்லி’ வடிவ உருவங்கள் மலர்ந்த முகத்துடன் ஒருவித மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்படி இருந்தது எங்கள் அனைவரையும் கவர்ந்தது.
அதைப் பார்த்து பலரும் ஆர்வக் கோளாறில் அவரவர் படங்களை உள்ளீடு செய்து நாம் எப்படி இருக்கிறோம் எனப் பார்க்கத் தொடங்கினர். என் தோழி விளையாட்டாக செய்யத் தொடங்கியது, அலுவலகம் முழுதும் தொற்றிக்கொண்டது. விளைவு, அனைவரும் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை சாட் ஜிபிடியில் செலுத்தி ‘கிப்லி’ வடிவ கதாபாத்திரங்களாக உருமாற்றிக்கொண்டிருந்தனர்.
‘கிப்லி’ புகைப்படம் என்றால் என்ன? சாதாரண டிஜிட்டல் புகைப்படத்தை நொடிப்பொழுதில் ‘கிப்லி’ சித்திரம் எனும் அனிமேஷன் புகைப்படமாக மாற்றிக்கொடுத்து விடுவதுதான் அது.
என் அலுவலகத்தில் மட்டுமல்ல, அடுத்த இரண்டு நாள்களுக்குள் ‘எங்கும் ‘கிப்லி’ எதிலும் ‘கிப்லி’ என இணையம் முழுதும் ‘கிப்லி’ பற்றிய தகவல்கள் நிரம்பி வழிந்தன. இந்த ‘கிப்லி’ என்ற சொல் அரபு மொழியில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. இதற்கு, சஹாரா பாலைவனக் காற்று என்று பொருள்.
இந்த ‘கிப்லி’ புகைப்படங்களில் அப்படி என்னதான் இருக்கிறது? நம்முடைய முகமே இன்னும் கொஞ்சம் உயிரோட்டமாக மாறினால் எப்படி இருக்கும்? அதை ‘கிப்லி’ தருகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்த ‘கிப்லி’ புகைப்படங்களைப் பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துப் போகிறது. காரணம் உற்சாகமான சிரிப்புடன் பார்க்கவே துள்ளலாக இருப்பதுதான். அந்தப் பெரிய கண்களும், உயிரோட்டமான முகமும் அனைவர் மனதையும் மயக்குகிறது என்று சொல்லலாம்.
உண்மையில், ஒரு கற்பனைக் கண்ணோட்டத்தில் நம்மை இன்னும் சிறப்பாக மெருகேற்றித் தருகிறது. கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்து உறுத்தாத நிறங்களில் உள்ளம் கவர்கிறது. நம் உண்மையான முகம்கூட இப்படி இருக்கக் கூடாதா என ஏங்கும் அளவுக்கு பலருக்கும் இந்த ‘கிப்லி’ புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.
This story is from the April 07, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பயர்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி
அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிபிஎஸ்இ
'12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை' என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத் தேர்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 mins
April 30, 2026
Dinamani Dharmapuri
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Dharmapuri
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்தது
தேர்தல் ஆணையம்
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
சபலென்காவை சாய்த்தார் பாப்டிஸ்ட்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டார்.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர்
1 min
April 30, 2026
Translate
Change font size

