Try GOLD - Free
தமிழர் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!
Dinamani Cuddalore
|July 03, 2025
வரலாறுகள் அறியப்பட்டவரை சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் இருந்து பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தடயங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே வாழும் தக்காணப் பீடபூமியில் வாழ்பவர்கள் மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் உலகத்துக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்படும் தொல்பொருள் ஆய்விடம்தான் கீழடி.
கீழடியில் கிடைத்த 6 கரிம மாதிரிகள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக, அமெரிக்காவின் ப்ளாரிடோவில் உள்ள பீட்டா அனலிடிகல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருள்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரு மட்டங்களுக்குக் கீழேயும், மேலேயும் பொருள்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரை என்று தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
இவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, தொல் தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல்தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் ஆகிய துறைகளின் வல்லுநர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல இரண்டாவது நகர நாகரிகம் இங்கு நிகழவில்லை என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால், கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரிகம் தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும், இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் உருவாகியுள்ளது.
கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
This story is from the July 03, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சாதனை படைக்கப்பட்டதாகக் கூறுவது ஏமாற்றும் செயல் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு
சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
தமிழகத்துக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. நீர்: கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
April 30, 2026
Dinamani Cuddalore
காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞர் கைது
சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
1 mins
April 30, 2026
Dinamani Cuddalore
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Translate
Change font size

