Try GOLD - Free
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
Dinamani Chennai
|August 29, 2025
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழர்களுக்கு பெருமைக்குரிய தருணம்.
'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளன என்று 'இண்டி' கூட்டணி தரப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து வந்தவர்; பாஜகவில் 40 ஆண்டு காலமாக ஊறித் திளைத்தவர் சி.பி.ஆர். என்று திமுக விமர்சிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்களில் இருந்துதானே ஒருவரை நியமிக்க முடியும் என்பதை நாம் எளிதில் மறந்து விடக்கூடாது. 2002-ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடைய ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்தபோது, கொள்கை ஞானோதயம் திமுகவுக்கு ஏற்படாதது ஏன்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழர்கள் வாக்களிப்பது ஒரு சித்தாந்த மோதல் என்று அவர்கள் தரப்பு சொல்வதை, எந்தவொரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமிழ்நாட்டின் மதிப்பீடுகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் ஒரு தமிழனின் உயர்வைத் தட்டிப் பறிக்கிற தேர்தல் போட்டியை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
அணுகுண்டு வெடித்து அகிலத்தின் கவனத்தை ஈர்த்த அ.பி.ஜெ. அப்துல் கலாம் என்கிற மனிதநேயப் பண்பாளரை திமுக எதிர்த்ததை இத்தருணத்தில் நாம் மறந்து விட முடியாது. இனம், மொழி, தமிழர் என்று பேசுபவர்கள் தங்களுடைய லாப, நஷ்டக் கணக்குகளுக்காகவே அனைத்துத் தீர்மானிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை திமுக எப்படி மறுக்க முடியும்?
This story is from the August 29, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
எங்கே கொண்டு போகிறாய் காலமே?
அண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.
3 mins
July 01, 2026
Dinamani Chennai
தவெக தலைமையில் புதிய கூட்டணி?
தவெக சார்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Chennai
விழிஞ்ஞம் துறைமுகத்தின் 49% பங்குகளை வாங்கும் உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனம் 'எம்எஸ்சி'
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான எம்எஸ்சி, கேரளத்தில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை சுமார் 140 கோடி டாலருக்கு வாங்குகிறது.
1 min
July 01, 2026
Dinamani Chennai
அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி
நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Chennai
வடதமிழகத்தில் இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Chennai
தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது
தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் நாடு முழுவதும் நெல் உள்ளிட்ட காரீஃப் பருவ விதைப்பு 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Chennai
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை
தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.
1 min
July 01, 2026
Dinamani Chennai
அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதியுள்ளது என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
July 01, 2026
Dinamani Chennai
போதை எனும் உபாதை!
போ தைப் பொருள் தடுப்பு முகமையின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டார்.
2 mins
July 01, 2026
Dinamani Chennai
ஆராய்ச்சிக்காக பறக்கவிடப்பட்ட பாறு கழுகு உதகை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், உதகை அருகே எப்பநாடு வனப் பகுதியில் ஆராய்ச்சிக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்பப்பட்ட வெண்முதுகு பாறு கழுகு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Translate
Change font size
