Facebook Pixel 'சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்' | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

'சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்'

Dinamani Chennai

|

April 24, 2025

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

'சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்'

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு நாடுகளுடனும் தனித்தனியாக நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிடப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் துணைப் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நட்பு நாடுகளின் தலைவர்களை எங்களின் பிரதிநிதிகள் தற்போது லண்டனில் சந்தித்துப் பேசிவருகின்றனர். இந்தச் சூழலில் நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் எப்போதும் தயாராக இருக்கிறது; ஆனால் ரஷியாவிடம் ஒருபோதும் சரணடையாது.

ரஷியாவுடன் மேற்கொள்ளக் கூடிய எந்த ஒப்பந்தமும், அந்த நாடு தனது படைகளை மீண்டும் திரட்டவும், கூடுதல் பலத்துடன் எங்கள் மீது தாக்குதல் நடத்தவும் அந்த நாட்டுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக இருக்கக் கூடாது.

ரஷியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென்றால் அது முழுமையானதாக இருக்க வேண்டும். தரை, வான், கடல் என்று எந்த வழியான தாக்குதலுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுதான் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல்படி.

ஆனால் குறிப்பிட்ட அளவிலான போர் நிறுத்தத்தை மட்டுமே ரஷியா விரும்பினால், உக்ரைனும் அதற்கு எதிர்வினையாற்றும்.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

திருவனந்தபுரம்-போத்தனூர் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

திருவனந்தபுரம்-போத்தனூர் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேக்கேதாட்டில் அணை கட்டினால் உபரி நீருக்கும் ஆபத்து!

கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அந்த மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரிநீர் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.

time to read

2 mins

June 01, 2026

Dinamani Chennai

காங்கோவில் எபோலா பாதிப்பிலிருந்து 5 பேர் மீண்டனர்

உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

மியான்மரில் வெடி விபத்து: 46 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது பிஎஸ்ஜி

ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், ஆர்செனலை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிருந்தாவனத்துக்கு கலசா பிஷேகம், புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனைகளை காஞ்சி சங்கரா சாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

நடப்பு சாம்பியன் கௌஃப், ஸ்வியாடெக் தோல்வி

களிமண் களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், நடப்பு சாம்பியனான கோகோ கௌஃப், முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினர்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

அவசர கோலத்தின் அவலம்!

இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% பேர் இருபது வயதுக்கும் கீழே உள்ளவர்கள்; அதாவது, மாணவர் பருவத்தினர்.

time to read

2 mins

June 01, 2026

Translate

Share

-
+

Change font size