Try GOLD - Free
மாமத யானைகள்
Kalki
|October 21, 2022
கதைகள்
பரவச இன்பம், பேரதிர்ச்சி - இரண்டையும் மூன்றே நிமிட வித்தியாசத்தில்தான் அனுபவிப்போம் என்பதை சுகுணா சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
நகரிலிருந்து சற்றே விலகியிருந்த அந்த நட்சத்திர ஹோட்டல் அறையின் ஒரு பக்கம் முழுவதும் பரவியிருந்தது அந்த ஜன்னல். அதன் திரையை விலக்கியபோது அவள் கண்கள் விரிந்தன. மனம் நிரம்பி வழிந்தது.
கொடைக்கானலில் இயற்கையின் எழில் வெளிப்படும் என்பது தெரிந்ததுதான். ஆனால், நேரடியாக அதை தரிசிக்கும்போது உண்டாகும் சிலீர் அனுபவம், அடடா... குன்று, பனி, சிற்றாறு, பரந்த புல்வெளி, மரங்கள், தொடக்கக்கட்ட சூரிய உதயம் ஆகிய ஒவ்வொன்றும் கண்ணெதிரே ஓவியமாகப் படர்ந்து அவளுக்குள் கவிதை உணர்வை மீட்டின.
'தேனிலவின்போது கவிதை எழுதினாயா?' என்று கேள்விப்படுபவர்கள் சிரிப்பார்களோ?
திரும்பிப் பார்த்தாள். புதிய கணவன் இன்னமும் தூக்கம் கலையாதவனாகப்படுத்துக் கொண்டிருந்தான். எழுப்பினால் அதை விரும்ப மாட்டோனோ? என்றாலும் நேரம் கடந்தால் அதிகாலை தனது 'அதி'யைத் தொலைத்துவிடும். அப்போது தான் காணும் இந்த மாஜிக் தருணம் மறைந்து விடலாம். தன் கணவன் ஒருபோதும் இக்காட்சியைத் தவறவிடக் கூடாது.
எனவே, அவனை உலுக்கினாள். 'கொஞ்சம் எழுந்து ஜன்னல் பக்கமாப் பாருங்க' என்றாள்.
சற்றே சோம்பலுடன் எழுந்தவன் காதலுடன் அவளைப் பார்த்தான். பின்னர் ஜன்னல்புறமாக அவன் பார்வை நகர்ந்தது. அவன் முகத்தில் வியப்பு புலப்பட்டது. ஜன்னலை நெருங்கினான்.
அவனது வியப்பு அவளை இன்பத்தில் ஆழ்த்தியது. தன் கணவனுக்குள் இயற்கையை ஆராதிக்கும் ஒரு கவிஞன் இருப்பானோ?
'பாலிகார்பனேட்லே செய்த ஜன்னல் இது. உறுதியாகவும் இருக்கும். எடைக் குறைவாகவும் இருக்கும். ஒளியையும் சிறப்பாக உள்ளே அனுப்பும்' என்றவன் ஜன்னலை மேலும் நெருங்கினான். 'இந்த ஜன்னலை டெம்பர்டு கண்ணாடியிலே செய்திருக்காங்க. பாதுகாப்பானது. உடைந்தால் கூட ஆபத்தான வகையில் சிதறாது'.
This story is from the October 21, 2022 edition of Kalki.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kalki
Kalki
இப்படி இந்தியாவில் நடக்குமா?
இங்கிலாந்து அரசியல்
3 mins
October 28, 2022
Kalki
எங்கும் இறைவனே
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'
1 min
October 28, 2022
Kalki
ATM ல் சுடச்சுட இட்லி வருகிறது
கட்டுரைகள்
3 mins
October 21, 2022
Kalki
‘வெடி’ச் சிரிப்பு!
ஜோக்ஸ்
3 mins
October 21, 2022
Kalki
சுந்தா (எ) சுந்தரேசன்
தொடர்கள்
9 mins
October 21, 2022
Kalki
வண்ணங்களும் எண்ணங்களும்...
ஜெயராமன் ரகுநாதன்
3 mins
October 21, 2022
Kalki
ஜாம்பவான் அப்பாக்கள்; வெரைட்டி பிள்ளைகள்
ஒரு நிருபரின் டைரி - 43
11 mins
October 21, 2022
Kalki
குருவாகவும், சிஷ்யனாகவும்... பரமசத்தியான பிரம்மமே நடித்துக் காட்டிய நாடகமே இது.
ஆதிசங்கரரின் வரலாறு
8 mins
October 21, 2022
Kalki
ஒரு தவமாக இந்த ஆண்டு மலரைத் தயாரித்திருக்கிறார்
நூல் அறிமுகம்
3 mins
October 21, 2022
Kalki
மாமத யானைகள்
கதைகள்
3 mins
October 21, 2022
Translate
Change font size

