Prøve GULL - Gratis

விண்வெளி பயணமும் 'லைக்கா' நாயின் தியாகமும்!

Kanmani

|

December 17, 2025

நவீன உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் மனிதகுலம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

- -தவா

விண்வெளி பயணமும் 'லைக்கா' நாயின் தியாகமும்!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்களும் நிலவையும், செவ்வாய் கிரகத்தையும் தாண்டி சூரியனின் மேற்பரப்பு வரை ஆராய்ச்சியை வேகப்படுத்தி வருகின்றன.

தற்போது வெகு இயல்பாக விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று திரும்புகின்றனர்.

ஆனால், விண்வெளியில் இத்தனை சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு நாயின் உயிர் தியாகமும், அதன் விண்வெளி பயணமும்தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விண்வெளிக்கு சென்ற முதல் உயிரினம் 'லைக்கா' என்ற நாய், அது தியாகத்தின் அடையாளமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்பு விண்வெளி பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. வளிமண்டல அடுக்குகளைத் தாண்டினால் பரந்து விரிந்த விண்வெளியானது உயிர்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், எத்தகைய பாதுகாப்பு கவசங்கள் தேவைப்படும் என்பது பற்றிய ஆழ்ந்த புரிதல் தேவைப்பட்டது.

இதனால் மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு சோதனை முயற்சியாக பல்வேறு உயிரினங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு 1947-ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகள், வி2 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பழ ஈக்களை நிரப்பி விண்வெளிக்கு அனுப்பினர்.

அண்டத்தின் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அறிய, மனிதர்களின் மரபணுவுடன் தொடர்புடைய பழ ஈக்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து 1949-ஆம் ஆண்டு ராக்கெட் பயணம் ஏற்படுத்தும் உயிரியல் விளைவுகள் பற்றி அறிய ரீசஸ் என்ற குரங்கு, விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்மூலம் விண்வெளி பயணத்தின்போது இதயத்துடிப்பு சுவாசம், உடலியல் செயல்முறைகள் எத்தகைய மாற்றம் அடைகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். துரதிஷ்டவசமாக அந்த குரங்கு இறந்துவிட்டது.

FLERE HISTORIER FRA Kanmani

Kanmani

அம்மா ஒரு துளசிச் செடி!

புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது

time to read

1 min

December 17, 2025

Kanmani

Kanmani

நேர்மறை உளவியலின் தூண்கள்!!

நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!

ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!

செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!

சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

Kanmani

தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

அங்கம்மாள்

பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்

உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

time to read

1 min

December 17, 2025

Listen

Translate

Share

-
+

Change font size