Prøve GULL - Gratis

சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம்

Dinamani Thoothukudi

|

August 08, 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடித் தவசுக் காட்சியை லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.

சங்கரன்கோவில், ஆக. 7:

இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா, கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி, 11ஆம் திருநாளான வியாழக்கிழமை நடைபெற்றது. காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்கான பொருள்கள் சகிதம், சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரர் மற்றும் மூன்று உற்சவ மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் நண்பகல் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார். மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, பிற்பகல் 1.35 மணியளவில் மேலரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு ரதவீதிக்கு வந்தார். அப்போது பக்தர்கள் கரகோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர். தவசுக் காட்சிக்காக தெற்கு ரதவீதியில் 2 சிறப்புப் பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Dinamani Thoothukudi

Denne historien er fra August 08, 2025-utgaven av Dinamani Thoothukudi.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இதற்கொரு முடிவு எப்போது?

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Thoothukudi

எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி

தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size