Facebook Pixel சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம் | Dinamani Thoothukudi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம்

Dinamani Thoothukudi

|

August 08, 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடித் தவசுக் காட்சியை லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.

சங்கரன்கோவில், ஆக. 7:

இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா, கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி, 11ஆம் திருநாளான வியாழக்கிழமை நடைபெற்றது. காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்கான பொருள்கள் சகிதம், சங்கரநாராயண சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வரர் மற்றும் மூன்று உற்சவ மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் நண்பகல் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார். மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, பிற்பகல் 1.35 மணியளவில் மேலரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு ரதவீதிக்கு வந்தார். அப்போது பக்தர்கள் கரகோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர். தவசுக் காட்சிக்காக தெற்கு ரதவீதியில் 2 சிறப்புப் பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thoothukudi

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size